Failures are stepping மண் to success

வெற்றிச்சிகரம் அடைய துணிந்து சென்றேன் ,
கால்கள் சறுக்கி கவிழ்ந்துவிட்டேன்.
உதிரம் துடைத்து விரைந்து சென்றேன் ,
பாதம் வழுக்கி மண்ணில் சரிந்தேன்.
மண் உதிர்த்து முன்னேறினேன் ,
சிகரம் கடப்பதறியா மண்ணில் விழுந்தேன்.
விழுந்து விழுந்து எழுந்தேன்,
மண் உதிர்த்து உதிர்த்து நகர்ந்தேன்.
உதிர்ந்த மண்ணை ஒன்று சேர்த்தேன்.
அது உயரம் நீண்டு சிகரம் தாண்டியது.
சிகரம் ஏற எனக்கு கடினம், ஆதலால்
மண்மீது ஏறி சிகரம் குதித்தேன்.

எழுதியவர் : SAMz (26-May-13, 8:30 pm)
பார்வை : 101

மேலே