சிம்மக் குரலுக்கு அஞ்சலி!

மாலைச்செய்திகள்
மனமழுகச்செய்தன!!
மாலை வெய்யிலாய்
மயங்குமென நம்பினேன்
காலைச்செய்திகளும்
கண்ணீரில் நனைந்தன!!

ஆலய மணியோசை
அடங்கியதோ அய்யகோ!
ஆண்டவன் கட்டளையோ!
ஆண்ட குரல் ஓய்ந்ததோ!

ஆறுமனமே ஆறு என்றே
அழைத்தானோ அவனடிக்கே!
பாடும் பாட்டில் மயங்கியதோ!
பரலோகம் கொண்டதோ!

உலகை விட்டுப்போனாலும்
உந்தன் குரல் எம் சொந்தம்!
எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்
மெட்டுக்குர்ல் கேட்டினிக்கும்!

தமிழ்ததாயும் அழுகிறாள்!
தனித்தமிழ்க்குரலோனே!
தமிழகு உச்சரிப்பில் இனி
தமிழ் பாடிக்கேட்பதெப்போ!

நெற்றி நிறை பட்டையிட்டு
நேர் வரை நேயம் தொட்டு
பற்றி நல் மனித வாழ்வு
பண்புத்தமிழ் மணக்க வாழ்ந்தாய்!

விருதுகள் அத்தனையும்
விரும்பித் தானே வந்தன!
பெருமைகளும் பெற்றன!
பின்னும அவை வாழ்ந்தன!

சௌந்தர ராஜனே!
சௌந்தர்ய வாச்னே!
சௌண்டுக்கும் ராஜன் நீ
சாவதும் நீ இல்லை!
உயிருடல் சொந்தக்காரன்
ஒப்பந்தம் செய்தபடி
உரியதை மீட்டாலும்
குரல் அவன் சொந்தமென
கொண்டாடக் கூடுமோ!

இறைவனடி சேர்ந்த நீ
இளைப்பாரி சாந்தி பெறு!
மறையாது உன் குரல்
மண்ணும் விண்ணும் ஒலிக்குமே!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (27-May-13, 12:50 pm)
பார்வை : 155

மேலே