மொட்டை (குட்டி கதை )

சோளிங்கர்
மலை கோவில்
சிறு வயதில் அப்பா உடன் போனபோது
அப்பா தம்பி பிரபு மொட்டை அடித்து கொண்டார்கள்
நான் மறுத்து விட்டேன்
அதனால் தேங்காய் பூ பை எனிடம்
வந்தது தண்டனையாக
நன்பகல் வெயில்
சோளிங்கர் மலை
நடக்க கெஞ்சம் கஷ்டமாக இருந்தது
அப்பா+ தம்பி பிரபு +
நான் நடக்க ...
ஒரு பெரிய குரங்கு என்னை நோக்கி வந்தது
நான் அங்கு இருத்த மரத்தில்
ஒரு குச்சி உடைக்க ...
அதற்குள் குரங்கு ஓடி வந்து என் கையில்
இருந்த பையை புடுங்கியது
எனக்கு என்ன செய்வது என்று புரியலை
அப்பா கத்த
தம்பி பிரபு மிரைண்டு போக
நான் குரங்கை அடிக்க
மரத்தில் ஒடித்த குச்சியை ஒங்கினென்
குரங்கு நான் ஓங்கிய குச்சியை பிடித்து
என்னை பயமுறுத்தியது
சில நொடிகளில்
குரங்கு பையில் இருந்த வாழைபழம் மட்டும்
எடுத்து கொண்டு ஓடியது...
அப்பா சிரிக்கிறார்
தம்பி சிரிக்கிறான்
"நீ மொட்டை போடாதால்தான் அனுமார்
உன் கையில் இருந்த
பையை புடுங்கி கொண்டு ஓடி விட்டார் என்று "
சொல்லி சொல்லி
நான் மொட்டை போடாத விசயம் குரங்குக்கு
எப்படி தெரிந்தது ?
என்பது எனக்கு ஒன்னும் புரியலை ....
ஆனால் மொட்டை அடித்ருத்த அப்பா + தம்பி
பிரபுவை பார்க்கும்போது
அன்று குரங்கு மாதிரி இருந்தது எனக்கு மட்டும்.
?????