நகைச்சுவை 21
நான் கடைக்குச் சென்றிருந்த போது ஒரு விபத்தைப் பார்த்தேன். அவர் பக்கத்துக்கு வீட்டிற்கு வந்த உறவினர் ..அந்த அம்மாவிடம் சொல்லணும் எப்படி சொல்றது?உடனே ஒப்பாரி வைப்பாங்க ...சரி சமாளிப்போம்..
நான்; வீட்டிற்கு வந்ததும் ..அந்த அம்மாவிடம் ''அம்மா''உங்க வீட்டிற்கு யாராச்சும் விருந்தாளிங்க வந்தாங்களா?
அம்மா; ஆமா ...என்னப்பா..
நான்; அவர் கீழ விழுந்துட்டாரம்மா ,...
அம்மா; சரி சரி அதற்கென்ன ?
நான்;காயம் பட்டுடுச்சும்மா...
அம்மா;சரி நல்லாயிட்டரா ??
நான் ; நா என்ன கதையா சொல்றேன்
அம்மா; என்னப்பா சொல்ற ?
நான்; அம்மா அவருக்கு accident ஆயிடுச்சும்மா ...
அம்மா; அடப் பாவி ?அத முன்னாடியே சொன்னா என்ன ?
நான் ; நா மட்டும் கதையா சொன்னேன் ..நல்ல கதை தான்
அம்மா; ஐயோ! ஏன் ராசா! எங்கப்பா இருக்க ...
நான்;ஒப்பாரி ஆரம்பிச்சிட்டாங்க ..