இணைந்திருப்போம்!!!!!

சிறை வாழ்க்கை என்ற கவலையில்
சில காலம் சிக்கி இருந்தோம்
நட்பெனும் விலங்கினால் நம் கைகள் இணைந்தன
நமக்குள் அன்பு விதையின்றி வளர்ந்தது
சிறகுகள் முளைத்து விண்ணில் பறந்தோம்
விண்ணையும் தாண்டி விண்மீன் பிடித்தோம்
சிரிப்பில் தொடங்கி
சிகரெட்டை பகிர்ந்தோம்
இரண்டு வருடம் சிகரெட் போல் புகைந்து விட்டது
சில தினங்களில் சிறையில் இருந்து விடுதலை
கைகளை சேர்த்த நட்பெனும் விலங்கினை அவிழ்க்காமல்
உடலால் மட்டும் பிரிந்து செல்வோம்
நம் நட்பால் நம் அன்பால் இணைந்திருப்போம்!!!!! :( :(

எழுதியவர் : பரிசோ டேனியல் (28-May-13, 2:14 pm)
பார்வை : 232

மேலே