குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள்!!!

வணக்கம் தங்கள் அனைவரையும்
இக்கட்டுரையின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்கிறேன்

உண்மையில் இக்கட்டுரை எழுதலாமா வேண்டாமா என்ற நீண்ட ஆலோசனைக்கு பிறகு வேதனை கலந்த உண்மைகளோடு இதை தங்கள் மேலான பார்வைக்கு வைத்துள்ளேன்

சர்ச்சையை செய்வதர்க்ககவோ,அல்லது நான் பெரிய மேதாவி என்று நிருபிக்கவோ,யார் மீதும் குற்றம் சுமத்தவோ அல்லது தண்டிக்கவோ இதை எழுதவில்லை மாறாக நம் எதிர் கால இந்தியாவின் நிலையையும்,நம் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியுமே இதை எழுதுகிறேன்

எனக்கு தெரிந்த விஷயங்களை இங்கு தொகுத்து எழுதிவிடுகேறேன்,விடுபட்ட விஷயங்களை என் உயிரினும் மேலான நண்பர்கள் தங்கள் கருத்துக்கள் மூலம் எழுதிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்
****************************************************************************
என் வாழ்நாளில் மறக்க முடியா தருணங்களில் மிகமிக முக்கியமான தருணம் எனக்கும் என்மனைவிக்கும் கடவுள் என் குழந்தை வடிவில் அளித்த பரிசை முதல் முறையாக கையில் பெற்ற தருணம்,

கையில் வாங்கிய அந்நொடியில் என் கையில் மெல்ல மெல்ல அசைந்தபடி,கண்களும் சரியாய் திறக்க நிலையில் என்னை போற்றி பாதுகாப்பையா? உன் பொறுப்புணர்வுகளை அதிகப்படுத்தி உன்னை சோதிக்கவே கடவுள் என்னை உன்னிடம் அனுப்பி உள்ளார்

நீ சரியான முறையில் என்னை போற்றி பாதுகாத்து,கல்வி,வாய்மை,நேர்மை,என எல்லா நல்ல விஷயங்களையும் கற்றுத்தருவாய் எனில் உன் முதுமை நாட்களில் நான் உன்னை தாங்கி நிற்கப்போகும் தெய்வீக வரம் நான் என சொல்லாமல் சொல்ல என் கண்கள் ஆனந்தத்தில் ஈரமான தருணம் அது

ஒவ்வொரு நொடியும் நொடிக்குள் அடங்கிடும் பொழுதுகளும்,முப்பொழுதும், எப்பொழுதும் அக்குழந்தையின் மேல் உள்ள பாசத்திர்க்காகவும், பாது காப்புக்காகவும், முன்னேற்றத்திர்க்ககவும் மனக்கோட்டை கட்டி உழைத்து கொண்டிருக்கும் கோடான கோடி அப்பாக்களில் நானும் ஒருவன்

குழந்தைகள் சமீப காலங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது நமது நாட்டில் பெருகி உள்ளது இதில் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை சொல்ல வார்த்தைகள் பத்தாது என்பதே உண்மை

சரி நம் நாட்டில் எத்தனை குழந்தைகள் இதில் பாதிக்க படுகிறாகள் என ஆராய்ந்த எனக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிட்டியது

தேசிய அளவில் கிராமம்,சிறு நகரம்,நகரம்,பெரு நகரம்,தலை நகரம் என ஒன்று விடாது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வெளியான அதிர்ச்சிகரமான தகவல் என் சுயநினைவை மறுத்து போகும் விதமாக இருந்தது இதோ அந்த தகவல்

100%ல் 52 %குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுகின்றனர்,அதாவது 2ல் 1 குழந்தைக்கு மேல்

இதில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் காரணம் ஆண்குழந்தைகளை யாரும் எளிதாய் நெருங்கிவிடுகின்றனர்

இந்த 52%ல் 28%குழந்தைகள் வலுக்கட்டாயமாக முத்தமிடல்,அவர்களின் மர்ம உறுப்பு,மார்பு பகுதி,பின்புறம் தீண்டுதல் என்ற ரீதியிலும்

மீதமுள்ள 24% குழந்தைகள் அந்நியாயத்தின் உச்ச கட்டமாய் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

சரி இப்படி செய்யும் மிருகங்கள் யார் என்ற கேள்விக்கு கிடைத்த பதில் என்னவென்றால்
பாதிக்கப்படும் குழந்தைகளின் பெறோர்களின் மிக நெருங்கிய சொந்தங்களும்,நண்பர்களும்,ஆசிரியர்களும்,
அக்கம், பக்கம் நம்மோடு வசிக்கும் மக்களும் இந்த நயவஞ்சக செயலை எளிதாக செய்து விடுகிறார்கள் என்று மேலும் மேலும் அதிர வைக்கிறது அந்த ஆய்வு

தயவு செய்து தங்கள் குழந்தைகளின் சின்ன சின்ன அசைவுகளையும் அலட்ச்சியம் செய்யாமல், அவர்கள் தங்களோடு சொல்ல வரும் விஷயங்களை ஆழ்ந்தும் கேட்டு அவர்களை இது போன்ற ஆபத்துக்களில் இருந்து காப்பது பெற்றோர்கள் ஆகிய நம்மின் கடமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

குழந்தை இவ்விஷயத்தை அவ்வளவு தெளிவாய் எளிதாய் சொல்ல முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் ஆகையால் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவும் தனிமையையும் நாடினால் தாமதிக்காமல் உடனடியாக குழந்தையின் பிரச்சனை என்ன வென்று தெரிந்து அதை தீர்க்கும் முயற்ச்சியை மேற்கொள்ளுங்கள்

தங்கள் குழந்தையிடம் மனம் விட்டு பேசுங்கள் யாரேனும் தேவையில்லாது முத்தமிடுதல் இது போன்ற தேவையிலாத இடங்களில் தொடுதல் போன்ற விஷயங்கள் செய்யின் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என அன்போடு தெரிவித்து வையுங்கள்

மருத்துவர்கள் இவற்றை 6 மாதத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு நினைவு படுத்துவது அவசியம் என பெற்றோர்களுக்கு அறிவுருத்தப்படுகிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது

நமது நாட்டின் தொழில் நகரமான மும்பையை சேர்ந்த ஹரிஷ் ஐயர் எனும் வசதியான வீட்டை சேர்ந்த வாலிபர் தான் 6 வயதில் இருந்து 18 வரை தன் சொந்த மாமாவால் இதுபோன்ற கொடுமையை அனுபவித்ததாகவும் தன் பெற்றோர்களிடம் இதை என்னால் தெரியப்படுத்தவே முடியவில்லை மேலும் இதற்க்கு என்ன வார்த்தைகள் சொல்வது என்றும் அப்பொழுது தனக்கு தெரியவில்லை என்றும் ஊடகங்களின் முன் அதிர்ச்சிகரமாய் தெரிவித்துள்ளார்

தன் குழந்தை பருவம் இப்பொழுது நினைத்தாலும் நரக வேதையாக உள்ளது எனவும் இது போன்ற கொடுமை எந்த ஒரு குழந்தைக்கும்
ஏற்படக்கூடாது எனவும்,இப்படி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மனரீதியான சிகிச்சை அளிக்கும்
மையத்தையும் தற்போது நடத்தி வருகிறார் என்பதும் குறுப்பிட வேண்டிய உண்மை விஷயமாகும்

கடவுள் இது போன்ற பெரிய ஆபத்துக்களில் இருந்து எல்லா குழந்தைகளையும் காத்து அருள வேண்டுவதோடு

நாமும் விழிப்புணர்வாய் இருந்து நம் பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாது காப்போம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (28-May-13, 3:32 pm)
பார்வை : 1284

மேலே