தேடலின் தேடல்கள்...

வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணங்களைத் தொலைத்து
திசைகளைத் தேடுகின்றன...........

நுரை தளும்பும் அலைகள்
மடிப்புகளை மறந்து
கரையைத் தேடுகின்றன.....

சிறகுகளின் இறகுகள்
விரித்தலை துறந்து
வானத்தைத் தேடுகின்றன.....

வீணையின் நரம்புகள்
சுரங்களைத் தொலைத்து
கீதங்களைத தேடுகின்றன......

கிழக்கின் கீற்றுகள்
விடியலை மறந்து
வெளிச்சத்தைத் தேடுகின்றன...

சாதி மதங்கள்
மனிதத்தை இழந்து
வாழ்க்கையைத் தேடுகின்றன....

எல்லா இந்தத் தேடல்களும்
மானுட பண்பின் பிறழ்வுகளின்
எதிர்வினை எச்சங்கள்..!!

அன்றியும் ,
மனிதத்தை நினைத்து
அன்பைத் தேடும்
சாதி மதங்கள் உண்டெனில் தேடுவோம்
வாருங்கள்...!!

உழைக்கும் தோள்களுக்கு
உரிய ஊதியம் அளிக்கும்
முதலாளிகள் உண்டெனில் தேடுவோம்
வாருங்கள்..!!!

பொறுப்பை உணர்ந்து
லஞ்சம் துறந்து
தொண்டாற்றுவோர் உண்டெனில் தேடுவோம்
வாருங்கள்..!!

கட்டணப் பொதி இல்லா
பொதுசன நிறுவனங்கள் உண்டெனில் தேடுவோம்
வாருங்கள்..!!

மொழிக்கொலையில்
கருத்து சிதைவில்லா கவிதைகள் உண்டெனில்
தேடுவோம்
வாருங்கள்...!!!!!

......தேடல்களின் தேடல்களில்
ஒருவேளை ,
மானுட பண்பின் பிறழ்வுகளின்
மரணம் நிகழலாம்....!!
அப்போது ,
மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழலாம்....!!!!

எழுதியவர் : அகன் (28-May-13, 4:38 pm)
பார்வை : 128

மேலே