உண்மைக்கதை 01
ஒரு முதியவர், நியூயார்க் நகரின் சாலை முடக்கு ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு நினைவு தப்பி இருந்தது. சிகிச்சை செய்த தாதி சிறிது விசாரணைக்குப்பின், அந்த முதியவருக்கு ஒரு மகன் இருப்பதையும், அவன் வடகரோலினாவில் தங்கியிருந்த ஒரு கப்பல் குழுவினருடன் இருப்பதையும் அறிந்து கொண்டனர்.
உடனே அந்தக் குழுவின் தலைவரைத் தொடர்பு கொண்டு, அந்த மாலுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொண்டார். அதன்படி அந்த மாலுமியும் விரைந்து வந்தார்.
அவனை முதியவரின் படுக்கை அருகில் அழைத்து சென்றனர். நினைவு புரண்டபடி இருந்த முதியவரிடம், ""உங்கள் மகன் வந்திருக்கிறார்,'' என்றனர்.
அதற்குள் அவருக்கு மீண்டும் நினைவு தப்பிவிட்டது. ஆனால், அவரது கை மட்டும் மெதுவாக நீண்டு மகனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது. மாலுமி அந்தக் கையை மென்மையாய் ஏந்தியபடி அடுத்த சிலமணிநேரம் அருகிலேயே இருந்தார்.
தாதியர்கள் மாறி, மாறி வந்தனர்.
""நீங்கள் வேண்டுமானால் வெளியே போய் சற்றே ஓய்வெடுக்கலாமே!'' என்றனர்.
ஆனால், அந்த மாலுமி அசையவில்லை.
பின்னர் அந்த முதியவரின் மூச்சு அடங்கியது. பின்னர் அந்த மாலுமி தாதியிடம், ""யார் அந்த முதியவர்?'' என்று விசாரித்தார்.
""அவர் உங்கள் அப்பா இல்லையா?'' என்று வியப்புடன் கேட்டார் தாதி.
""இல்லை! ஆனால், அவர் மகனின் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கியதாகத் தெரிந்தது. அதனால்தான் சில மணி நேரம் அவரது மகனாக இருந்தேன்,'' என்றார் மாலுமி.
அன்புக்கு ஈடு இந்த உலகில் எதுவுமே இல்லை.
நன்றி : தினமலர்