உண்மைக்கதை 02
![](https://eluthu.com/images/loading.gif)
இங்கிலாந்தில் ஒருநாள், ஒரு குதிரை வீரன் தன் வேட்டைக் குழுவினருடன் வேட்டையாட ஒரு பகுதிக்கு வந்தான்.
அப்பகுதியின் முன் பக்கம், ஒரு சிறுவன் வாசற் கதவுகளை அடைத்துக் கொண்டு, காவல் காத்துக் கொண்டிருந்தான்.
""பையா! கதவுகளைத் திறந்து விடு!'' என்றான் குதிரை வீரன்.
""மன்னிக்க வேண்டும் ஐயா! எங்களது இந்தப் பகுதியில் யாரும் வேட்டையாடக் கூடாது என்று சொல்வதற்காகவே என்னை நிறுத்தி இருக்கின்றனர். அதனால் திறப்பதற் கில்லை!'' என்றான் சிறுவன்.
""நான் யார் தெரியுமா?'' என்று அதட்டலாகக் கேட்டான் குதிரை வீரன்.
""தெரியாது ஐயா!'' என்றான் பையன்.
""நான் தான் வெல்லிங்டன் பிரபு!''
பையன் உடனே தலைகுனிந்து, தொப்பியை எடுத்து வணக்கம் செய்தான். ஆனால், கதவுகளைத் திறக்கவில்லை.
""வெல்லிங்டன் பிரபு என் தந்தையின் கட்டளையை மீறும்படி என்னைக் கேட்கமாட்டார்,'' என்றார் பணிவுடன்.
வெல்லிங்டன் மெதுவாகத் தன் தொப்பியைக் கழற்றி புன்னகை செய்தார்.
""சிறுவனே! உன் கடமை உணர்வை நான் மதிக்கிறேன்,'' என்றார்.
பிறகு வெல்லிங்டன் பிரபு தன் ஆட்களை அழைத்துக் கொண்டு திரும்பினார்.
நன்றி : தினமலர்