தமிழ்செல்வனின் இரண்டாம் நட்பு.......

இந்த கதை என் வாழ்கையில் இருந்த இரு நண்பர்களின் உண்மை தோற்றத்தை நான் அறிந்த கதை. தமிழ் மாமேதைகளின் ஆசியுடன் இந்த கதையை சமர்பிக்கிறேன்.
சிறு வயதிலிருந்தே ஒன்றாக விளையாடி ஒரே தட்டில் உணவு உண்டு தன பாசத்தை ஒருவர் மேல் ஒருவர் காட்டிகொண்ட இரு நண்பர்கள் ஒருவன் பெயர் தமிழ்ச்செல்வன் இன்னொருவன் பெயர் குமரன் . இருவரும் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து கொண்டு கல்லூரி செல்லும் காலம் வந்தது.
தமிழ்ச்செல்வன் படிப்பில் திறமை சாலி கொஞ்சம் கடினப்பட்டு படிப்பான் தனுடைய வீடு கஷ்டத்தை நினைத்து . ஆனால் குமரன் அதிக அளவில் படிப்பில் நாட்டம் காட்ட மாட்டன் தேர்ச்சி பெற்றால் போதும் என்று படிக்கும் சொகுசு வாழ்க்கை காரன் .ஒரு நாள் தமிழ்செல்வனின் தாயார் இறந்தார் அந்த நிலையில் அவனுக்கு ஆதரு கிடைக்க வில்லை தந்தை இருந்தும் உருப்படி இல்லை இந்த நிலைமையில் தமில்செவனுக்கு ஒரே ஆதரவு அவன் நண்பன் குமரன் தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்து அவனது படிப்பு செலவை பார்த்து கொண்டான். இதனால் தமிழ்ச்செல்வன் குமரனுக்கு அதிக அளவில் கடமை பட்டான் .இருவரும் ஒன்றாக தன்னுடைய நடப்பு பயணத்தை ஆனந்தமாக நடத்திகொண்டிருந்த்தனர்
குமரனுக்கு தேவையில்லாத ஆசைகள் வர தொடங்கின காரணம் அவனது இளமையும் , அந்நிய நண்பர்கள் சகவாசமும் .பெண்களிடத்தில் குமரன் அதிகம் நாட்டம் கொண்டான்.ஒவ்வொரு பெண்களையும் காதல் செய்யும் பெயரில் அவர்களின் இளமையை பறித்து கொண்டான் .இதனால் சில பெண்களின் வாழ்கை கேள்விக்குறியும் ஆனது .இந்த விஷயம் தமிழ்செல்வனுக்கு தெரியாமல் போனது .குமரன் பெண்கள் விஷயத்தில் கெட்டவனாக இருந்தாலும் நட்பில் அவன் என்றும் புனிதனாக இருந்தான்.
தமிழ்ச்செல்வன் அவன் கல்லூரியில் முதலாம் வருடம் பயிலும் நித்யா வின் மீது காதல் கொண்டான் அவளும் அவன் காதலை ஏற்று கொண்டால் இருவரும் காதலில் புனிதத்தை புரிந்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர் .நித்யாவின் வீட்டில் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் எனவே அவர்கள் பதிவு திருமணம் செய்து கொள்ள தயாராகினர். ஒரு நாள் இரவு நித்யாவை அவள் வீட்டிலிருந்து கூட்டி வந்து தனுடைய அறையில் இருக்க செய்து அவன் திருமண வேலைகளை பார்க்க சென்றான் .இந்த நேரத்தில் அவன் வீட்டிலிருந்த குமரனை நம்பி நித்யாவை விட்டு சென்றான்.மறுநாள் காலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தாள். .தமிழ் செல்வனும் மோட்டார் வாகனத்தில் சென்ற ரோட்டில் அடிபட்டு கிடந்தான் தலையில் அடிபட்டதால் தமிழ்ச்செல்வன் சுய நினைவை இழந்தான்.இரண்டு வருடம் கழித்து அவனுக்கு சுய நினைவு வந்தது தன காதலி இறந்ததி அறிந்த அவன் மன உளைச்சல் கொண்டால் எப்படி அவள் இறந்தால் என்று தெரிந்து கொள்ள சென்றான் அப்பொழுது குமரன் சிறைச்சாலையில் இருபது தெரிய வந்தது அதாவது நித்யாவை குமரன் தான்
கற்பழிக்க முற்பட்டு கொலை செய்தான் என்று. இதை கேள்வி பட்டதும் தமிழ்ச்செல்வன் அதிக அளவில் கோவம் கொண்டான்.அவன் காதலியின் மேல் வாய்த்த அன்பும் ,குமரனின் நம்பிக்கை துரோகமும் அவனை கொலைகாரனாக ஆக தயாரானது.10 வருடங்கள் கழித்து குமரன் விடுதலை பெற்று வெளியில் வரும்போதே குமரனின் தலையை துண்டாக வெட்டி எறிந்தான் தமிழ்ச்செல்வன். தமிழ்ச்செல்வன் கைது செய்ய பட்டான். இத இரண்டு கொலை வழக்கை வக்கீல் மாசிலாமணி எடுத்து உண்மைகளை ஆராய்ந்து பார்த்தார் இறுதியாக உண்மையையும் தெரிந்து கொண்டார் .தமிழ்செல்வனை பார்க்க மாசிலாமணி சிறைசளைகு சென்றார் அங்கு தமிழ்செல்வனிடம் உண்மைகளை சொன்னார் அந்த உண்மை என்னவென்றால் அன்று இரவு நித்யா அறையிலிருந்து வெளியில் வந்து குமரனை தன்னுடைய காம பார்வையால் பார்த்தல் அவனை கட்டிலுக்கு அழைத்திருக்கிறாள் ஆனால் குமரன் நீ என் நண்பனின் மனைவி ஆக போகிறவள் அனால் நீ அவனுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை செய்வாயென்று எதிர்பார்க்கவில்லை அவன் வந்தவுடன் உன்னை அவனுக்கு உன் போலி வேஷத்தை காட்டுகிறேன் என்று சொன்னான்.அதற்கு நித்யா நான் தமிழ்செல்வனை காதளிதற்கு காரணம் அவன் எனக்கு ஆடம்பர வாழ்கையை தருவான் என்று ஆனால் அவன் ஒன்னுமில்லாதவன் என்று எனக்கு நேற்று தான் தெரிந்தது .உன்னை நான் அவனுடன் நான் பார்த்திருக்கிறேன் அவனை விட நீ அழகு மற்றும் எல்லா விதத்திலும் உயர்ந்தவன் எனவே உன்னை பார்க்க தான் நான் என் வீட்டிலிருந்து என்னை கூட்டிவரசொன்னேன். மற்றும் அவனுடைய மோட்டார் வாகத்தின் கட்டுபாடு கருவியை துண்டிடித்து விட்டேன் ,அவனை விடு நாம் இருவரு திருமணம் செய்து கொள்ளலாம் மேலும் இபொழுது என்னுடன் கட்டிலில் உறவாட வா என்றால். குமரன் கோபமுற்று அவன் கண்ணதிலே அறைந்தான் தன்னுடைய நண்பனின் கைபேசி எண்ணுக்கு முயற்சி செய்தான்..தன்னை அடித்தால் கோபமுற்ற நித்யா "நீ மட்டும் யோகியமா பெண்கள் என்றல் உனக்கு பிடிக்குமே என்னை மட்டும் ஏன் உனக்கு பிடிக்கவில்லை என்று தயவு செய்து என்னி ஏற்றுகொள் என்றால்" குமார் சொன்னான்" அடிப்பாவி நான் பாவி தான் பெண்கள் விஷயத்தில் நான் மோசமாக இருந்ததால் இப்பொழுது என் நண்பணின் கனவு கலைகிறதே!! அய்யோ!!! தயவு செய்து அவனை உண்ம்மையாக காதலி அவனை திருமணம் செய்து கொள் இங்கு நடந்தாய் நீயும் மறந்து விடு நானும் மறந்கிறேன் மேலும் என் சொத்துக்கள் அனைத்தும் அவன் பெயரிலே மாற்றி விடுகிறேன் ,நான் எங்கேயாவது போய் விடுகிறேன் தயவு செய்து அவன் கனவை கலைக்காதே அவன் உன்மேல் உண்மயான அன்பு வைத்ருகிறான் நித்ய அவனை ஏமாற்றாதே " என்று சொல்லி கொண்டே தமிழ்ச்செல்வன் கைபேசிக்கு முயற்சித்தான் .நித்யா குமரன் சொல்லிய வார்தகை மதிக்காமல் அவனை நெருங்கினால் கோபமுற்ற குமரன் நீ என் நண்பனுக்கு தேவையே இல்லையடி என்று கத்தியால் அவளை கொலை செய்து கொன்றான் .பிறகு இந்த உண்மை தன் நண்பனுக்கு தெரிய கூடாது என்று மேலும் நித்யா இப்படி பட்டவள் ,அவள் காதல் பொய் என்றால் அவன் உயிர் போய்விடுமே என்று என்னை தான் தன் நித்யாவை கற்பழிக்க முற்பட்டு கொன்றேன் என்று என்றும் அழியாத கறையை தன் மீது பூசிக்கொண்டு சிறைசாலைக்கு சென்றான் .தமிழ்செல்வனுக்கு தலையில் அடிப்பது என்று தெரிந்ததும் அவனுக்கு வெளிநாட்டு மாறுவம் கிடைக்க தன்னுடைய சொத்துக்களின் பாதியை அவனுக்கு செலவு செய்தான் மற்றும் அவன் சிறைசாலையில் இருந்து வெளியில் வந்ததும் தன் நண்பணின் முகத்தை காண ஆசையாக வந்தான். என்று முழு உண்மையையும் சொன்ன மாசிலாமணி கண்களில் கண்ணீர் வந்தது.மாசீலாமணி சொன்ன உண்மைகளை கேட்டு தமிழ்ச்செல்வன் கொண்ட துயரத்துக்கு அளவு இல்லை மனம் வருந்தினான் குமாரனுடைய நட்பின் ஆழத்தை புரிந்து கொண்டான். தமிழ்ச்செல்வன் சிறையிளிருத 10 வருடங்களும் தன் நண்பனுடன் வாழத நடப்பு பயணத்தை எண்ணி எண்ணி வருந்தினான்.அவன் உருவதை சுவர்களை வரைந்து அவன் பாதக்கலங்க நினது மன்னிப்பு கேட்டான்..குமரனின் அன்பை நினைத்து நினைத்து அழுதான் மனம் வருந்தினான் . 15 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டான் அவனுக்கு ஆன் குழந்தை பிறந்தது தனுடய நண்பன் குமரன் மீண்டும் பிறந்ததாக எண்ணி அந்த குழைந்தைக்கு குமரன் என்று பெயரிட்டு அதிக பாசத்தை காட்டி வளர்த்தான் .தான் நண்பனுக்கு செய்த தவறுக்கு
அவன் குழந்தை குமரனிடம் பரிகாரம் செய்தான். அவன் குளித்தான் குமரனிடம் ஒரு அன்பான நண்பனை போல் நடந்துகொண்டான்..கண்டிப்பான தந்தையாக ஒருபோதும் அவன் நடந்து கொள்ளவில்லை.. மீண்டும் குமரனின் நட்பு தமிழ்செல்வனுக்கு கிடைத்தது..இதுவே இவனுக்கு இரண்டாம் நட்பு..குமரன் நட்பு...
இந்த கதையின் மூலம் உண்மையான நண்பர்களின் உணர்வுகள் தெரிந்தது.. இந்த உலகத்திலே மிகவும் புனிதமான உறவு நட்பு மட்டும் தான் எனவே நட்பை காப்போம் நண்பர்களிடம் உண்மையான அன்பை காட்டுவோம்...
இவண்: (நா.ராம்குமார்)

எழுதியவர் : நா. Raamkumar (29-May-13, 3:24 pm)
சேர்த்தது : Naa.Ramkumar
பார்வை : 552

மேலே