"தமிழ் சொன்ன காதல் "
பெண்ணே !!!
நிலவோடும்
மலரோடும்
பேச
தெரியாதவனுக்கு
உன்னோடும்
பேச தெரியாது !!!!!!
மழலை மொழியும்
அருவியின் சினுங்களும்
புரியாதவனுக்கு
உன் மொழி
புரியாது !!!!
மழையின் கருணையும்
புவின் பொறுமையும்
உணராதவன்
உன்னையும்
உணர்ந்து கொள்ளமுடியாது !!!
தென்றலின் இனிமையும்
இசையின் அருமையும்
அறியாதவனுக்கு
உன்
அருமை தெரியாது !!!!!!
எதுவும் தெரியாமல்
நானோ
தனியாக
தவித்த
வேளையில்,
கவியோடு
என் காதலை
உன்னுள்
உரைத்தது
என்
அன்னைத்தமிழ் !!!!!!