பிறமொழி தீண்டா தமிழ்க்கவி தீட்டு

அழகு தமிழ் கவி படைக்க
அயல்மொழி துணை எதற்கு ?
சொல் வளம் குறையோ
சொல்லும் விதம் பிழையோ
எழுத இயலா மொழியா
ஏற்றம் காணா குறையா
பாட்டன் படைக்கா கவியா
உலகறியா மொழியா
உயர்வு தரா அறிவா
ஆட்சி நடத்தா அவையா
அரவணைக்கா தலைவனா
ஊக்கம் பெறா கவிஞனா
ஊட்டம் தரா கவிதையா
படை நடத்தா இனமா
பகை நடுங்கா இடமா
வள்ளுவன் சொல்லா வாழ்வியலா
வரிகள் இரண்டில் இல்லா கருப்பொருளா
பாவேந்தன் படைக்கா கவியா
பைந்தமிழர் படிக்க எடுக்கா கருவியா
பாவாணர் காட்டா சான்றா
பாருக்கு பறைசாற்றா மொழித் தோற்றா
அறம் செய்ய விரும்ப சொல்லா ஒளவ்வையா
சினம் கொல்லச் சொல்லா அவள் வரியா
உணர்ச்சிக்கவி வரி தரா
எழுச்சித் தமிழரா
புரட்சி பெயர் காணா பிரபாகரனா
இல்லாது இல்லாதாக்கும் மொழியல்லவா
பிறமொழிச் சேர்த்து கொல்லாது
கொற்றம் காண தூந்தமிழ் பழகுவது
நம் பணி அல்லவா !!!!!!!

எழுதியவர் : தமிழ்முகிலன் (28-May-13, 8:22 am)
பார்வை : 167

மேலே