ரோட்டோரம்

எச்சில்இலை
காடுகளுக்கு
சொந்தம் கொண்டாட
ஊசி இலை
காட்டு விலங்குகள்
வரப்போவதில்லை

பெரிய யானையின்
வாய்ப் படுகையில்
சிந்தி சிதறியவை
சின்ன எறும்புகளின்
எதிர் பாரா பொக்கிஷம்

கனவான்களின்
வறட்டு கௌரவங்கள்
எங்கள் பசிக்கு
எச்சில் சோற்று
பருக்கைகளாய் -
நாங்கள் சிறிது
இளைப்பாறுகிறோம்.

பண்டிகை காலத்தில்
நாங்கள் போடும்
புது சட்டை
போகிப் பண்டிகையில்
பலபேர் தூக்கிவீசிய
பழைய சட்டைகள் -
நெருப்பில் போடாமல்
தந்த நெஞ்சங்களுக்கு
நன்றி சொல்லவேண்டும்.

கழித்தல்
கூட்டலானது
அதுவே
குளிர் தாங்கியது
இப்படித்தான்
பெருக்கலும்
வகுத்தலுமாய்
போகிறது எங்கள் வாழ்க்கை!!!

எழுதியவர் : சுசீந்திரன் (31-May-13, 7:31 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 68

மேலே