காதல் உன்னை பிரியாது

அவள் நினைவுகளோடு
அழகான கடற்கரையில்......

நான் மட்டும் தனியாக.......

என் தோள்களில் கைபோட்டு.
தன்னோடு அணைத்துக் கொள்கிறாள்....

உப்புக் காற்று கூட அன்று.
உவர்க்கவில்லை........

சட்டென்று முகம் திருப்பிய.
என் உதடுகளின் குவிப்புக்குள்......

அங்கே அடித்த கடற்கரை காற்றில்.
அவள் கன்னங்களின் நினைவுகள்.......
நான் இறக்கின்ற போதும்.

என் உயிர் இறக்காது பெண்ணே.

நீ என்னை பிரிகின்ற போதும்.

என் காதல் உன்னை பிரியாது கண்ணே.

எழுதியவர் : ஆஷிக் (1-Jun-13, 12:48 pm)
சேர்த்தது : ashiq
பார்வை : 64

மேலே