எட்டடுக்கு மாளிகை!

எட்டடுக்கு மாளிகையாம்,
கட்டித்தந்தான் கடவுளாம்--உனை
ஏழாவது அடுக்கிலேதான்
ஏற்றிவைத்துக் காத்திருந்தேன்----நீ
வீட்டிருக்க மனமில்லையோ!
வேல்விழியாள் சொல்லடியோ!

நீ இல்லா மாளிகையோ!
நிறமிழந்து போனதடி---இது
பேய் வாழும் மாளிகையாய்
பேரொழிந்தும் கெட்டதடி---இனி
எட்டடுக்கும் ஒவ்வொன்றாய்
பட்டுவீழச் சிதையுமடி!

மேலடுக்கும் என்னாச்சோ!
நாலுங்கெட்டுப்போயாச்சு--அந்த
ஆறாவது அடுக்குங்கூட
தேறாத நிலையாச்சு--பாவம்
ஐந்தாவது அடுக்கு மூடி
ஐயோ கதி ஆகிப்போச்சு!

நான்காவது அடுக்கிலென்ன
நடக்குதென்றே தெரியவில்லை--இப்போ
மூன்றாவது அடுக்கு நைந்து
முடியாது ஓயுந்தாச்சு--பாவி
இரண்டாவது அடுக்கு இத்தும் .
சுருண்டு விழும் வேளையாச்சு!

முதலடுக்கு முறிந்து விழ
முறுமுறுத்து ஆனதடி--இந்த
எட்டடுக்கு மாளிகையும்
இடிந்து சாயப் போகுதடி--நீ
இல்லா மாளிகையும்
யாருக்குத்தான் வேண்டுமடி!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (1-Jun-13, 9:52 pm)
பார்வை : 112

மேலே