உன்னுடனான காதல் முடிவுக்கு வந்தது
மரங்கொத்தி பறவையொன்று
முள் குத்தி செத்ததுவே !
காதல் கானங்குருவியொன்று
காணாமல் போனதுவே!!
உயிர்கள்மேல் அக்கறை எனக்கு
இருந்தும் உன்னை கொன்றுவிட்டேன்
கடலேழு தாண்டி மலர் சேகரித்தேன்
நீ என்னை கொன்று தூவிவிட்டாய்
உன் விரல் கோர்த்த கையின்று
விஷம் தேடி அலைகிறது
உன் விழி பார்த்த கண்ணின்று
குருடாக போகிறது
உனக்காக துடிக்கும் இதயம்
உன்னை எங்கென்று கேட்டதடி
உளறிவிட்டேன் விலகிவிட்டாளென்று
உறங்கிவிட்டது என் இதயம்
அவள் மணமகளாக என்ஜீவன் போக
இவ்வாறாக என் காதல் முடிவுக்கு வந்தது