தம்பிக்கு இரங்கல் கவி - சி. எம் .ஜேசு

தந்தை வித்திட்ட விதைகள் நான்கு - அதில்
வளர்ந்தது மூன்று வீழ்ந்தது ஒன்று
வீழ்ந்ததை எழுத நினைத்தபோது
கடந்தது காலங்கள் நாற்ப்பது
எழுதியதோ இன்று - நீ

துடித்தழுது பசியால் புடவை
யானைக்குள் துல்லிய போது
அழுவாதே ஆனஒலி என - உன்
ஞானஒளி பெயரை அழைத்தேன்

தாவித் தாவி நீ நகன்ற
இடத்தில இல்லாமல் மறைந்தேன்
உருதுனையானாய் உன்னருகில் நானிருந்து
உன் அழுகை போக்கினேன்

கள்ளமில்லா நல்ல தினமான
திருவண்ணாமலை தீபத்தின் நாளினிலே
நீ பிறந்து அன்னையை மகிழ்வித்தாய்

அன்னையின் மகிழ்வு நீடிக்கவில்லை
நோயின் பீடிக்கையில் நீ சிக்கி
மறைந்து போனாய் எம்மை விட்டு - உன்னை

நினைத்து நினைத்து நெஞ்சம்
கலங்கினால் உன் தாய்
உன்பின் மற்று மொரு தம்பி பிறந்து
ஊரையே வாழ வைக்கின்றான்
இறைத் தொண்டனாக !

உவகை கொள்கிறோம்
உமை மறவா உன் குடும்பம்
உன்னை நினைத்து பல
நற்காரியங்கள் செய்யும்

எழுதியவர் : சி. எம் .ஜேசு (1-Jun-13, 10:20 pm)
பார்வை : 301

மேலே