தளத்தில் இறுதிப் தேர்வு பட்டியல்

வன்மங்களின் சுமைதாங்கியாய்
தளத்தின் இறுதித் தேர்வு பட்டியல்
குப்பைகள் சேர்வது வீட்டில் இயல்பு
அதை துலக்கி ஊரோரம் சேர்ப்பது
மனிதர்களின் வாழ்வு முறை.
அந்த விதத்தில் தளத்தின் வீடாம்
படைப்பு பக்கங்களில் வந்த
கருத்து மோதல் குப்பைகளை
துலக்கி ஓரம் கட்டி
ஊரோரமான இறுதி தேர்வு பட்டியலில்
கொண்டு கொட்டுவது தளம்வாழ்
மனிதர்களுக்கு இயல்பாகிறதோ?
அன்னைதெரசாவின் படைப்பையும்
குப்பையில் சேர்த்துவிடத்துடிக்கும்
அழுகியபழ சிந்த்தனைகள் அங்கே
துர்நாற்றம் வீசத்தொடங்கி விட்டனவே
வீட்டின் குப்பைகளை துடைத்தெறிய
துப்புரவு தொழிலாளியை
நான் அமர்த்தவில்லையே
என் வீட்டுக் குப்பையை
நானேதான் ஒழிக்கிறேன்.
இந்த தளத்திலும் அதைத்தானே
இயல்பாய் செய்ய முயற்சிப்பேன்
இங்கே அனைவருடனும் கைகோர்த்து
செய்ய விழைவேனே.
வாருங்கள் சகாக்களே ஒன்றுபடுவோம்
பரிசு வெல்வதற்கு அல்ல
சேர்ந்த குப்பைகளை,
ஒதுக்கி வைக்கப்ப்ட்ட
குப்பை சிந்தனைகளை
தேடிக் கண்டுபிடித்து
சுத்தப்படுத்த முயல்வோம்.
ஒழிப்போம் இலக்கியத்தில்
இதெல்லாம் வாராதோ?
ஹூம்
எனக்கு வந்த யோசனைகளில்
இது வரவில்லையே.
அதுசரி
அந்த கூப்பாடே
ஒரு கோடாங்கித்தன கூப்பாடுதானே
ஒழிப்போம் கூப்பாடு போட்டவர்களை
அடக்கியதால்தானோ என்னவோ
குப்பைகள் சேர்ந்து கொண்டு
ஒழிக்க முடியாமல் போகின்றன.
ஒருவேளை
ஒழிப்போம் கூப்பாடு போட்டவரை
சுதந்திரமாய் திரிய விட்டிருந்தால்
இந்த குப்பைகளை சேர்ந்திருக்காது போலும்!
ஒதுக்கித்தள்ளட்டும்
அன்னைத் தெரசாவையும்
குப்பைகளாக்கி.
குப்பையில் கிடந்த குழந்தைகளை
செழிப்பாக வளர்த்தவளே அவள்தானே.
அவளுக்கு இது ஒன்றும் புதிதல்லவே