தேயிலை("தேய்"-இலை) உறவுகள்....

அது மழ காலம் இல்லை ஆனால் வானமே இரண்டாய் பிழந்தது போல் மழை கொட்டிக் கொண்டிருந்தது.
ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு ஓட்டு வீடு அதை பார்க்கும்போது,ஒரு குழந்தையை அதன் அம்மா குளிப்பாட்டும் போது அந்த குழந்தை தன் தலையை ஆட்டி தண்ணீரை நாலாப்பக்கமும் சிதறடிக்குமே அதுபோல அந்த வீட்டின் ஓடு மழை நீர் நாலாப்பக்கமும் சிதறடித்துக் கொண்டிருந்தது..அந்த வீட்டிலிருந்து வெளியே திண்ணைக்கு வருகிறார் ஓர் முதியவர்.அவர் தான் இராமச்சந்திரன் அந்த ஊரின் முன்னால் தலைவர்.அவர் குடும்பம் அந்த ஊரிலேயே பணக்காரக் குடும்பம் அவர் இப்ப இருக்கிற தோட்டத்து வீட்டை சேர்த்து நெறய சொத்து சேரும் ஆனால் இவ்வளவு இருந்தும் அவர் ஏழை.வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்தவர் மழையைப் பார்த்து இப்படி முனு முனுக்கிறார்
"ச்சே என்ன மழை..,நேரங்காலம் தெரியாம "அப்பிய..,கார்திய"
கொண்டாடுது..,"
ஆமாங்க அவர் இப்படி அலுத்துக்கறதுக்கு காரணம் இருக்கு..,அப்பலாம் ஐப்பசி,கார்திகை வந்துட்டா வட்டிக்கடைக்காரன் மாதிரி "டான்னு"மழை வந்திடும் மக்களை சந்தோஷப்படுத்திட்டு போயிடும்.என்ன வட்டிக்கடக்காரன் வந்து எல்லாத்தையும் அள்ளிட்டு போயிடுவான் மழை எல்லாத்தையும் கொட்டிவிட்டு போயிடும் அவ்வளவு தான் வித்தியாசம்.சும்மாவே "கரண்ட் " இருக்காது இதுல மழை வேற சொல்லவா வேணும் "கரண்டும் " போயிடுச்சு இதற்கு அந்த முதியவர் "அரிகோன்"விளக்கு இருந்த காலத்துல கூட கரண்ட் போகாம இருந்தது இப்போ இவ்வளவு அறிவியல் முன்றேன்றமடஞ்ச காலத்தில் இப்படி அடிகடி கரண்ட் போகுது.
"இவங்கல கேட்டா அவங்கல சொல்றாங்க அவங்கல கேட்டா இவங்கல சொல்றாங்க " இப்படி மாத்தி மாத்தி சொல்லிக்கிறாங்கலே தவிர மக்களுக்காக மற்றுவழியை யோசிக்க மாட்டேங்கிறாங்கலே.
இப்படி அப்பப அரசியலும் பேசுவார் இராமச்சந்திரன்..,ஏன்னா இவரும் அரசியல்வாதி தான் பத்து வருசத்துக்கு முன்னால் "இளைஞர்களுக்கு"வழி விடுறதா சொல்லி அரசியல இருந்து விலகினார் ஆனால் இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் இவரோட வயசானவங்க..
ஓட்டுத் தாவாரத்திலிருந்து ஒரு துளி நீர் பருத்தி பஞ்சுப்பொதியில் விழுந்தது போல் அவர் தலையில் விழுக அதை அவர் தட்டிவிட்டு விட்டத்தையே வெகுநேரமா பார்த்துகிட்டே இருக்க இருக்க அவர் மனம் வேரெதுலயோ லயிக்கத் தொடங்கியது.ஆம் பத்தண்டுகளுக்கு முன் நடந்த ஊர் திருவிழாவில் மனம் லயிக்க ஆரம்பித்தது.அந்த திருவிழா தான் இராமச்சந்திரன் தலைமையில் நடந்த கடைசி திருவிழா.திருவிழாவிற்கு சென்னையிலிருந்து அவருடய மகன்,மருமகள்,பேரன்,பேத்தி இன்னும் பக்கத்து ஊர்களில் இருக்கும் அவருடய சொந்தங்கள் எல்லாம் வருவாங்க.
மயிலாட்டம்,கரகாட்டம்,பஞ்சு மிட்டாய்,இராட்டிணம் என திருவிழா கலைகட்டும்.இப்பவும் தான் திருவிழா நடக்குது ஆனால் அந்த பழய உற்சாகம் இல்லை.கடவுளை கையெடுத்து கும்பிட்டவங்க இப்ப
"சல்யூட்"அடிச்சு ஸ்டைலா கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க கேட்டால் "நாகரிகமாம்" இப்படி சொல்லி நொந்து கொள்வார்.அவர் நொந்து கொள்ள இன்னொரு காரணமும் இருக்கிறது,இப்போதெல்லாம் திருவிழாக்களுக்கு அவர் பேரன்-பேத்தி யாரும் வருவதில்லை,
போன் பண்ணிக்கேட்டால் பேரன்-பேத்தி சொல்கிறார்கள்
"போங்க தாத்தா,வில்லேஜ் ரெம்ப போர்".
வானத்தில நிலாவை சுத்தியிருக்கிற நட்சத்திரம் மாதிரி அவரை சுத்தியிருந்த உறவுகள் திடீர்னு வேலையை காரணம் காட்டி சென்னைக்கு போய்விட்டார்கள்.
அப்பப்ப திருவிழாக்காவது வந்துகிட்டு இருந்தாங்க இப்ப அதுவும் இல்லை மனுசன் மேலும் நொந்துகிட்டார்.இவர் இரண்டு மாசத்துக்கு ஒரு தடவ சென்னைக்கு போய் உறவுகளைப் பார்த்துவிட்டு வருவார்,இப்ப கொஞ்ச நாளா பயணம் செய்ய உடல்நிலை ஒத்துவரல.அந்த பெரிய வீட்ட விட்டுட்டு இந்த தோட்டத்து வீட்டுக்கு வந்துட்டார் பெரியவர் ,உறவுகள் கவனிப்பின்றி இருக்கும் இவர்
ஏழை தானே..!
இவர் எல்லாவற்றையும் நினைத்து முடிக்கவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது.வீட்டிற்குள்ளே போய் தான் பாதியில் விட்டுவிடு வந்த "சத்திய சோதனை"யை படிக்கத் தொடங்குகிறார்.இவர் போல ஒருசில வீடுகளில் மட்டுமே "காந்தி" வாழ்கிறார் புத்தக வடிவில்.
என்னாதான் சென்னையில் தன் பிள்ளைகள் வசதி-வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலும் இவர் போல கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு,வாழ்பவர்களுக்கு தங்கள் வீட்டுத் திண்ணை தரும் சுகம் சென்னை தருவதில்லை....

எழுதியவர் : மீனாட்சி.பாபு (2-Jun-13, 11:52 pm)
சேர்த்தது : மீனாட்சி.பாபு
பார்வை : 107

மேலே