சிலுவையில் அறைந்த சித்திரங்கள்(தர்மத்திற்க்கும் காதலுக்குமான யுத்தம்)

சிலுவையேற்றப்பட்ட
என்
கவிதைச்சாம்பல்கள்,
பொசுக்கென்று
கரைந்து போகிறது!
இது உனக்கும் எனக்குமான யுத்தம்!

உன் மௌனத்திற்க்கும்
என்
மரணத்திற்க்குமான
சத்தம்!

நித்தம்
சபதம் கலந்த
சாபத்தாலும்,
சாபம் கலந்த
சபதத்தாலும்
என்
நித்திரை முடிவை
நிச்சயிக்கிறது,
உன்
நிராயுதப் பயணம்!

உனக்கும்
எனக்குமான
இடைவெளிகளில்
தோன்றும் விரிசல்களை
நிரப்ப முயன்றே
நிறைவடைகிறது
என்
அந்திப்பொழுதின் அடக்கம்!

அந்தியினை அடக்கம்
செய்த
அடுத்த நொடியிலே
என் மனநடுக்கமும்
தொடக்கமாகும்!

இரவென்னும்
தீவுகளில்
தினமும்
இரண்டு கொலைகள்
என் அனுமதியின்றி
எனக்குள்ளே
நிகழ்கிறது!

தர்மமாகிய துச்சம்
என் ஒருவனுக்குள்ளே
ஒவ்வொரு நொடியும்
தனிமையாகிறது!
அய்யோ!
என் தனிமை கண்டு
எனக்கே
அச்சமாகிறது!

இது உனக்கும்
எனக்குமான யுத்தம்!

எழுதியவர் : ருத்ரா (2-Jun-13, 10:40 pm)
பார்வை : 101

மேலே