இன்னும் நூறாண்டு நீங்கள் வாழவேண்டும்.

தூக்கம் வரவில்லை
எனக்கு
விடிந்தால் உங்களுக்கு
தொண்ணூறு துவங்குகிறது.

வயது உங்களுக்கு
நூற்றுக்கு பத்து குறை.
என்றாலும்
நூற்றுப்பத்துக்குள் பதுங்காத
நூதன முதல்வர் நீங்கள்

நெருக்கடி நேரத்தில்
உங்கள் கரம் காத்த
ஜனநாயகம்
கோட்டை வளாகத்தில்
கொத்தள புழுதியில்
சாகக்கிடக்கிறது.

பொருந்தா புகளுரையால்
புன்னகைக்கு வழியில்லா
மேஜை தட்டல்களால்
ஜனநாயக ரத்தம்
சிதறுகிறது.

ஐந்து முறை அரசாண்ட
அதிசயம் நீங்கள்.
ஒருமுறையும் தோற்காத
விடுமுறையும் எடுக்காத
வித்தகமே!

மீண்டும் நீங்கள்
வரவேண்டும்!

ஜெயா அரசால்
மெல்ல சாகும் தமிழை
உங்கள்
வெல்லும் கரத்தால்
காக்க வேண்டும்.

தேசங்கள் பேசும்
திருக்குவளை சரித்திரமே!
உழைத்தும் களைக்காத
ஓவியமே!

இன்னும் நூறாண்டு .
நீங்கள்
வாழவேண்டும்.

எழுதியவர் : மோசே (2-Jun-13, 10:29 pm)
சேர்த்தது : மோசே
பார்வை : 89

மேலே