கல்யாணம் !
ஆள் வைத்து அடித்த
ஆலய மணி அன்று
பூசாரி போடும் சுவிட்சில்
இன்று
தானே அடிக்கிறது ஆசிர்வாதிக்க !
கனமான சில்வர் டம்ளர்
காணாமல் போய்
வலுவிழந்த பேப்பர் டம்ளர்
பந்தியில் வந்து பல்லிளிக்கின்றன !
வாழை இலை பறந்து போய்
பேப்பர் இலை நல்ல பெயர்
எடுக்க
துடிக்கின்றன !
மணமக்களையும், மேடையும்
அலங்கரித்த நறுமண ரோஜாக்கள்
இன்று
பிளாஸ்டிக் ரோஜாக்களாக
வேடமிட்டு செயற்கை
புன்னகையை உதிர்க்கின்றன !
கோளரில்லா இதயத்தோடு
வாழ்த்திய
தாத்தா, பாட்டிகள் மறைந்து
பேஸ்மேக்கர் பொருத்திய சித்தப்பா
பெரியப்பா இதயங்களின் நிடூழி
வாழ்த்துக்களோடு
அரங்கேறியது திருமணம் !