மலரும் மனிதனும்
மலர்களும் மடிந்து
மண்ணையே தழுவுகின்றன
மனிதனும் மடிந்து
மண்ணையே தழுவுகின்றான்
மலர்கள் மறுநாள் அதே மரத்தில்
அழகாய் பூக்கின்றன
ஆனால் மனிதனோ
மடிந்த இடம் தெரியாமல்
மறைந்தே போகின்றான்
இதனால்தான்
மலர்கள் தினமும் சிரிக்கின்றன
அதன் அடுத்தநாள் பிறப்பை எண்ணி
ஆனால் மனிதனோ அழுகின்றான்
இறப்புக்கு அடுத்த பிறப்பொன்றை
இவ்வுலகில் காணமுடியாததை எண்ணி