கல்லூரி விடுதி
காலையில்
கண் திறக்கும் நேரத்தில்
செல்லமாக திட்டி எழுப்பும்
"அப்பா"
கிளம்ப தாமதம்
செய்தலும்
காலை உணவு வைக்கும்
"அம்மா"
எனக்கு முன்
கிளம்பி பெருமையாக
நிற்கும்
"அக்கா"
வாசல் வரை
வந்து
கை அசைக்கும்
"தங்கை"
அனைத்தையும்
என்னிடம் இருந்து
தள்ளி வைத்துவிடது
என் கல்லூரி விடுதி