கைம்பெண்
அம்மி மிதித்து
பார்த்த
அருந்ததி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரமாய்
மாறியதே -என் வானில்
பன்னீர் தெளித்து
புன்னகை சேர்த்து
கோர்க்கப்பட்ட
மணமாலை
பிணமாலையாய்
தொங்கியதே -என் தோளில்
சீர்வரிசை
சிறப்பான வாழ்வுக்கென்று
நினைத்து ..
இரத்தங் குடிக்கும்
அட்டையாய் மாறக்கண்டேன்
என் வாழ்வில்
சிலரது அற்ப மனசுதானே
என்
ஆயுள் தண்டனைக்கு
ஆயுதமாய்ப் போனது
கல்லானாலும் கனவனென்று
எண்ணியநான்
வெட்கித் தலை குனிகிறேன்
கல்லிலும் சிலசமயம்
துளி ஈரம் பிறக்கும்
என அறிந்து !!!!!