ஏணி
விண்தொட நினைப்பவரை
சிலசமயம்
மேகம்தொட வைப்பதே
சாத்தியமாகிறது எனக்கு
என்னில் -ஏறி
முன்னேறிச் சென்றவர்கள்
என்னைத் தூற்றிச் சென்றாலும்
வாழ்த்த மட்டுமே
எனக்கு தெரியும்
என்னை
இகழ்ந்து போனாலும்
உமிழ்ந்து போனாலும்
மக்கிய என்னுடலை
மண்ணோடு புதைத்துப் போனாலும்
உவந்து ஏற்றுக் கொள்கிறேன்
ஏனனில் ....
ஏணி நான்
ஏற்றிவிட மட்டுமே
தெரிந்த எனக்கு இறங்குவதில்
இம்மியளவும் இஷ்டமில்லை .