பயணத்தில் பயணம் செய்த காதல்
"பயணத்தில் பயணம் செய்த காதல்
நிறுத்தத்தில் இறங்க மறுத்த கால்கள்
முன் நின்றும் விலக துடிக்கும் மனம்
சென்ற பின் ஏங்கும் அவள் முகம் பார்க்க
மறைத்த தலைகள் விலக, விலகிய நேரம்
எங்களை அறியாமல் விழிகள் நான்கும் மோத
உடைந்தது உள்ளம் உறைந்தது இரத்தம்
அத்தனையும் மறந்தவனாக பயணத்தில்
அனைத்தும் கலைந்தது அந்த நிறுத்தத்தில்
மறுத்தும் இறங்கினேன் மன வருத்தத்தில்
நடைபிணமாய் வீட்டிற்கு - உயிரோ?
பின் தொடரும் அவள் சென்ற வாகனத்திற்கு
பேருந்தே காதல் ஊடகம்
அதில் நடப்பதெல்லாம் அரை மணி நேர நாடகம்
நாடகம் என்றும் விழிகளில் மட்டுமே தொடரும்
இறுதியில் உன் நினைவு பயணத்தில்
நான் ஒரு காதல் பயணி....
-----"பயணத்தில் பயணம் செய்த காதல்"------