நன்றி.... நன்றி... நன்றிகள்....
அகன் அய்யாவிற்கு என் முதற்கண் வணக்கங்கள்,
அய்யா தங்களுடைய தளத்தினரால் அனுப்பி வைக்கப்பட்ட விலை மதிப்பற்ற பரிசினை நான் பெற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என் வேண்டுதல் போலவே எனக்கு சான்றிதழுடன் கிடைத்த பரிசு, நான் நினைத்து பார்க்காத ஒன்று. தங்களுக்கும் எழுத்துத் தளத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கவிதையை எழுத ஒரு உந்துதலாக இருந்த தம்பி "கலை", எனக்களித்த தலைப்பினில் (கணக்கியல் இலக்கியம்) இருந்து கிளைக் கவிதையாகத் தோன்றியதுதான் இந்த "வலிகள் விற்பனைக்கு (அல்ல)" என்பதை கூறிக் கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கலைத் தம்பிக்கு என் அன்பான நன்றிகள். மேலும் தலைப்புகள் வழங்கி எனக்கு ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.
மேலும் எனக்கு வாக்களித்து இக்கவிதையை பரிசுக்குரிய கவிதையாக்கியமைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் வாசகர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாழ்த்தினை அளித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தளத்தின் தமிழ் சேவை தொடர்ந்து வளரவும் சிறந்த தளமென்ற புகழோடு விளங்கவும் இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
சொ. சாந்தி