கனவுகள்
கனவொன்று நான் கண்டேன்
கண்மூடி நடு இரவில்
கானகமெல்லாம்
கால்தடங்களாக ....
கற்பனை காவியமாய்
காட்சிப் பிழையாய்
காண்பதெல்லாம்
அநாகரீகமாய்
காலத்தின் கோலமாய் ........
வறண்டபாலை என்று
வகையாய் ரசித்துச் செல்லும்
நம் வருங்கால தூண்கள் ...
மதுரம் தேடி மனதை
மயக்கும் பட்டாம் பூச்சி
பட்டுப்போன மரம் பார்த்து
பட்டென்று பறந்து போச்சு ....
காதிலே கீதம் பாடும்
தேனியோ கலங்கியே
கண்துளியை கக்கிப் போச்சு .....
தண்ணீர் ஊற்றெடுத்த
கானகத்தில் இன்று வென்னீர்
ஊற்றெடுத்து நானலைந்தேன் ....
கரம்பற்றி நான் ஆடிய
காட்டுக் கொன்றை இன்று
காரசார விருந்துக்கு
காரணமாய் போச்சுது.......
வெயிலறியா என் தேகம்
இன்று வேதனைக்கு நிழல்தேடி
அலைவதை நான் கண்டேன் ..........
முகமறிந்த மனிதனெல்லாம்
இன்று ஆதிவாசியாய்
அடைக்கலம் தேடி ....
அடுத்தவனை பிடுங்கி
அரைவயிற் நிரப்பும்
அபலைகுரலும்
அதிர்சியில் எழுந்தேன் ......
........................................கனவுகள்தொடரும் .................