ஈர nilavu

அன்று சொன்னான் விஞ்ஞானி
நிலவில் தண்ணீர் இல்லை - அது
வறண்ட கிரகம் என்று!
முடிவு பிழையாய் இருக்கலாம்!
மீண்டும் ஆய்ந்து பார்க்கலாம்!
என்று சென்றான் நிலவுக்கு!
இன்று கண்டான் விஞ்ஞானி!
நிலவில் தண்ணீர் உண்டு! - அது
எதிர்கால மெய்யென்று!
காதல் நிலவே உன்னிடம்
நடுவில் வந்த சண்டையில் - உன்
கோபம் தந்த வெப்பத்தில்
ஈரம் இல்லை உன்னிடம்
என்று விலகி ஓடினேன்!
வேறு யாரையும் பிடிக்காமல்
பிரிவின் தாக்கம் தாங்காமல்
நாட்கள் யுகமாய் நகர்ந்திடவே
கெளரவம் தயக்கம் தந்தாலும்
மீண்டும் வந்தேன் உன்னிடம்!
காலம் உண்மை உரைத்திடவே
புரிந்து கொண்டேன் இன்றுதான்
ஆபத் பாந்தவி நீயாக!
பாசம் கொட்டும் தாயாக! - என்றும்
ஈர நிலவே நீ வாழ்க!
வாழ்க்கை உண்மை உணர்த்திடவே
புரிந்து கொண்டேன் இன்று நான்
காதலி என்ற கிரகத்தை
ஆய முடிந்த விஞ்ஞானி
காதலன் காதலன் அவன்தானே!