குழந்தை பொய் சொல்லாதே.............!

சின்னச்சின்னக்குழந்தையாம்
அன்ன வண்ணக் கிண்ணத்தில்.
திண்ணையொன்றில் ஓடியாடி...

அன்னையவள் சோறூட்ட.......
அந்தவேளை நானுமே
அவ்வழியே சென்றிட...............

முன்னப்பின்னே அறியாத.......
என்னைப்பார்த்துச்சுட்டியே
"தாத்தா" என்றே விளித்தது..........!

"மாமா" என்றும் சொல்லவில்லை.
"அண்ணா"வெனறும் தோன்றவில்லை.
"தாத்தா" என எப்படி அடையாளம் அறிதந்து!

வீட்டுக்குத் திரும்பினேன்.
வீட்டாளை வினவினேன்.
காட்டியது என்னடி ...........
கண்டு சொல் என்றதும்
நாணத்தில் கோணியவள்
"நானெப்படிச் சொல்லுவேன்
தோணவில்லை அப்படி
ஆனாலும் குழந்தையோ
அறியாது பொய்யுரை!"
என்றாளே என்னவள்
சென்றதென் கனவுகள்!

என்னவிது விந்தையென
கண்ணாடி முன்னின்று
என்னை நான் தேடினேன்!

வாலிபம் முடிந்த அந்த
வரலாறும் புரிந்தது!
வயதான பதிவுகளும்
வளருவதும் தெரிந்தது!

அங்கங்கு வெள்ளைமுடி
சிங்காரமாய் ஒளிர்ந்தது!
முத்தலாகும் இளநியாக
முக அழகும் வளர்ந்தது!

தாடையது சாடையாக
தாழ்ந்து நிலை சொன்னது!
"கோடையின்னும்
நெருங்கவில்லை!
கூடி மகிழத் தடையுமில்லை!
முத்தினால் சத்துத்தான்!
வித்தைகள் பத்திரம்!
விளையாடு நித்தமும்!"


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (6-Jun-13, 11:29 am)
பார்வை : 182

மேலே