உடையும் இந்தியா (பாகம்- 2)- தமிழ்முகிலன்

உடையும் இந்தியா (பாகம்- 2)-தமிழ்முகிலன்
----------------------------------------------------------------
வேற்றுமையில் ஒற்றுமை
வேதாந்த முகமூடியுனுள்
வேரில் நஞ்சு ஏற்றும்
வேடதாரி இந்தியம்
வேரறுபடும் நாள் வரும் ஒரு தினம் ..

வேறுப்பட்ட இனங்களின்
மாறுப்பட்ட மொழிகளை
கூறுப்போடும் கொடிய இந்தியம்
கூப்பாடு போடுதே
கூறுக் கெட்ட இந்தியே தேசமொழி என்றே ..

கூட்டாட்சி எனக் கூற
கூட்டுச் சேர என் நாடும்
கூடாரமிட்டு குடியேற இந்தியம்
குடிச்சோறானது பல நாடு
குழிக்குள் பிணமாக பல நூறு ..

இந்தியத்தில் அங்கமில்லா
காஸ்மீரும் கல்லறையாகுது
காவிகளின் கனவுக்காக -இரத்த
கரை நிறைந்த நிலமாகுது..

இந்தியக்
காவக்கார படையும்
காவு வாங்குது
கன்னிப் பெண்கள்
கற்ப்பை

காக்க வரும் இளைஞனையோ
தாக்க எழும் தீவிரவாதியென
சுட்டுத் தள்ளுது
தடம் அற்றே புதைக்குது .

இந்தியத்தின் இருப்புக்கு -தேசிய
இனங்கள் உயிர் விலையாகுது
பூசிய சாயம் வெளுக்கவே
தாசி முகம் ஜொலிக்குதே ...

ஒத்த ஒத்த மா நிலமும்
ஒதுக்கி தள்ள முனைஞ்சிடுச்சு
ஒத்துமையா சேருவோம்மையா
செத்துத் தான் போகவே இந்தியம்

கூடாத ஒன்றியம் கூடியதால்
ஊடாக வந்த இந்தியத்தால்
கேடாக போனதே
நாடாண்ட இனங்களுக்கும்
நானிலமும் தரிசாகவே

இந்தியத்தில் அடிமையாய்
இருந்தது போதுமடா
தமிழா
ஒற்றுமையாய் ஆகிவிட்டால்
ஒன்றியம் தூள் தூளாகிடும் சரியா .........

எழுதியவர் : தமிழ்முகிலன் (6-Jun-13, 12:48 pm)
பார்வை : 92

மேலே