மழை!
மழை !
விண்ணின்
முகில்விடு தூது
மண்ணுக்கு !
மழை !
வரம்!
மண்ணுக்கும் மனிதனுக்கும்
வாழ்வு !
மழை !
ஈந்து பெறு இன்பம் என்பதை
காட்டி நிற்கும்
காலக்ண்ணாடி !
மழை !
மேகம்
தாகம்
கொண்டவர்க்காய் - தன்னை
நிர்வாணமாக்கும் ...!
மழையில் நான்
மழலை ஆகிறேன் ...!
மழையை
ஒருசின்ன குடை .....!
மனிதனை
ஒருசின்ன கொடை ...!
மழை !
வரமாகும் ! - அதுவே
மானிடம் மகத்துவம்
இழக்கும்போது
சாபமாகும் !
வரமாகும் நான்
வேண்டும் வரம் ...
காடழித்து
கருகலைப்பு செய்யாதீர்
என்னை !!!!!