என் கல்லூரி தோழி........
கல்லூரித்தாயின் கருவறையில்
நட்பின் குழந்தைகளாய்
நாம்.....
இந்த கல்லூரி கவிதை
முதல் பக்கத்தில்
இதழின் சிரிப்பாய்
புன்னகையில் தொடங்கும்
முதல்வரி.....
பிரிவை முடிவாக
கண்ணீர் சிந்தவைக்கும்
கடைசிவரி!
இதில் நீ.....
நான் இறுதியில் வாசித்த
முதல்வரி.....
நட்பின் முகவரி.....
பட்டுபூவை தொட்டுபார்க்க
படபடக்கும் பட்டாம்பூச்சியின்
செல்லபெச்சு.....
மலர்ந்த பூக்களின் நடுவே
இதமாய் உலாவரும்
தென்றல் பார்வை.....
விண்ணை உலாவரும்
நிலவின் தங்கை
அழகாய் மின்னும்
நட்சத்திர புன்னகை.....
வறண்ட பாலைவனத்தில்
எப்போதாவது வந்து செல்லும்
சின்ன சின்ன தூறலாய்
செல்ல கோபம்.....
மொத்தத்தில்.....
என் நட்பு பூந்தோட்டத்தில்
இறுதியாய் பூத்த சின்ன பூ!
என் செல்ல பூ!
முகத்தில் புன்னகையை மட்டுமே
முதலீடாக கொண்ட முல்லைபூ!
என் வாசிப்பில்
முடிவுறா கவிதை நீ.....
உன்னை முற்றுபுள்ளியிட்டு
முடித்திட மனமில்லை!
உன் நினைவுதோட்டத்தில்
என் ஞாபக தென்றல் வீசினால்
அவ்வபோது எடுத்து
வாசித்துவிடு.....
வாரத்திற்கு ஒருமுறை.....
இல்லை.....
வருடத்திற்கு ஒருமுறை.....
சரவணன் கி