என்னவள் தான் அவள்...
படிக்கப் படாத என் பல(பழைய) படைப்புகளில்....இதுவும் ஒன்று....தங்கள் பார்வைக்காக..
--------------------------------------------------------------------------------------------------------------------
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
என் வாழ்வின் பயனாய்,
வயதின் சுகமாய்,
இனிமையில் சுவையாய்,
தனிமையில் தோழியாய்,
வருவாய் என நினைத்திருந்தேன்....
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
வெப்பக் காற்று வீசுதடி,
மங்கை, உன் விழியில்,
அதில் குளிர் காய விழைந்தேனடி,
தளிர் உன் இசைவோடு,
காயும் போது சுட்டுப் பொசுக்கினாள்,
கயல்விழியாள், சூரியன் குணமோ....
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
விலகி நின்று,
என் இதயச் செந்நீர் பிழிந்து,
என் விழி வழியும் கண்ணீர் கொண்டு,
அவள் நீராடினாள் இன்று,
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
காதலிக்கும் போது கனவில் வந்தாய்,
மனம் பேதளிக்குதடி இன்று,
உன் நினைவைக் கொண்டால்,
கனவுகள் தந்தாயடி,
கண் மூடும் நேரத்திலே,
கண்களைப் பறித்தாயடி,
கனவு கைக்கூடும் பொழுதினிலே....
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
உயிரை உனக்கு உரித்தாக்கி நின்றேனடி,
உனக்கு உரியவன் என்ற மமதையைக் கொண்டு...
பிரிவை மட்டும் பரிசாய்க் கொடுத்தாள்,
பக்கங்கள் எழுதினேன், அவள் நினைவுகளைக் கொண்டு....
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
பதவி முடியும் தலைவர் போல,
பரிதியை நாடும் பனிமலர் போல,
பாவை, அவள் பதில் கேட்கக் காத்திருந்தேன்,
இமை கூட சிமிட்டாமல், அவளைப் பார்த்திருந்தேன்....
ஆனால்...
மௌன இருக்கையில் அவள் வீற்றிருந்தாள்....
இங்கு,
மௌனம் சம்மதம் அல்ல,
அவள் என் காதலியும் அல்ல....
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
மறுத்துவிட்டாள் ஏனோ என்னை மணம் புரிய,
மனம் இல்லை எனக்கு, அவள் மறுப்பு அறிய....
யாசிதேனடி உன்னை, என் நேசம் குறித்து,
நீ நேசிப்பாயடி என்னை ஒருநாள், என் யாசகம் புரிந்து....
ஆனால்,
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
உன் விழி வாள் வீச்சில் மடிந்தேனடி,
உயிர்த்தெழுந்து உன்னுடன் வாழ இச்சை கொண்டேனடி...
பழகிய நாட்களெல்லாம்,
கானல் நீராய் மறைவதென்ன மாயம்...
உதிரம் ஒழுகுதடி,
வேறு காரணமென்ன, நீ கிழித்த இதயக் காயம்...
என்னவள் இல்லை அவள்,
பிரிந்துவிட்டாள்....
ஆண்டு பல கடந்த போதும்,
அவள் பிரிவினால்,
மாண்டு போக மாட்டேன்....
ஏற்றம் கொடுத்த பெற்றோரை,
உதறிப் போக மாட்டேன்....
அழகிகள் ஆயிரம் இருந்தும்,
அவளைப் போல வருமா,
ஆண்டவன் அளித்த துணையை,
என்றும் ஏற்க மாட்டேன்....
அவள் பிரிந்த போதும்,
என்னவள் தான் அவள்,
பிரிய மாட்டேன் அவளை,
என் நினைவுகளால்,
என் உணர்வுகளால்,
என் கனவுகளால்,
என் கண்ணீர்த் துளிகளால்....!!!!!