காதல் கைதி

என் யூகங்கள்தான் தப்பாயிடுச்சு
என்னுடையதுதான் குற்றங்கள்

உன் தோழியுடன் சிரித்துபேசியதை நான் ஏன்
என்னைப்பார்த்துத்தான் சிரிக்கிறாய் என நினைத்தேன்
எதேர்ச்சையாய் திரிம்பிப்பார்த்த‌தையெல்லாம்
நான் ஏன் என் விம்பம் முன் நின்று சினிர்த்தேன்

அது
பேதை போதையில் அலைந்த காலம்....
என் காதலை சொல்லாமலே நானும்
என்னை காமெடிப்பீசாகவே கருதிய நீயும்
ஒரே ஒரு வார்த்தையேனும் பேசியிருந்தால்
தெளிந்திருக்க முடிந்திருக்கும்
என்னால் சிலிர்த்துக்கொள்ள முடிந்திருக்கும்
மீட்கமுடியாத அந்த பொன்னான நாட்களை

இன்று எழுதியென் பயன் என்று கேட்டது என் மனசாட்சி
"அடுத்தவனுக்காவது பயன்படுமே பதில் சொன்னது" ஆடவர் மனசாட்சி
காலம் காலமாக இப்படித்தான் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறோம்
ஒவ்வொரு ஒற்றைக்காதலனும்

எந்த மனமும் எப்போதும் அதனை கேட்டதில்லை
சூடு காணும் வரை, சிலவை கண்ட பின்னும் சுட்டுப்பொசுக்கும் வரை
பேதை கொண்டு அலைகிறது
பேதைபின்னே அழி(ழு)கிறது

எழுதியவர் : Rikas Marzook (6-Jun-13, 4:19 pm)
சேர்த்தது : Rikas Marzook
Tanglish : kaadhal kaithi
பார்வை : 96

மேலே