வேண்டுதல்

எனக்கொரு குழந்தை
எதிர்பார்க்கிறது மனது
எப்படி இருக்கும்?
எனக்கான ஆசை
என்னவரைப் போல்
ஒரு பையன்
நீளமான மூக்கும்
உயரமான தோளும்
அமைதியான குணமாய்!
அது அப்படியாக
என் நிறமும் வேண்டும்
பெண்ணாய் பிறந்தால்
அத்தையைப்போல்....
ஆண்டவனே.....
அடங்காப்பிடாரியாய்
அளித்துவிடாதே.....
என்நிலமை பரவாயில்லை
என் கணவர்
எத்தனைபேரை
சமாளிப்பார் .....பாவம்!!!!

எழுதியவர் : விஜி (8-Jun-13, 4:53 pm)
பார்வை : 68

மேலே