ஏழைக்கிழவனின் ஓலைக்குடிசை

ஏழைக்கிழவனின் ஓலைக்குடிசை
பாலை நிலத்தில் வாழைக்குடிசை
காற்று வாங்க மேட்டுத்திண்ணை
காற்று வீசும் வீட்டுத்தென்னை
மண்பானை நீர் குளிர
குடிப்பது பரமசுகம்
திண் பனை குளிர் நுங்கூற
தின்பது கோடிசுகம்
குளிர் தாங்கும் ஓலைக்கீற்று
வெயில் பொழுதில் தென்றலூற்று
உழவுத்தொழில்
மரபுத்தொழில்
கரவுத்தொழில்
நிறைவுத்தொழில்
மாட்டுவண்டி இரட்டை
கூட்டு வண்டி
காட்டை நன்றே பதமாக்கும்
வீட்டை அண்டி
பொழுதானா நல் தூக்கம்
எழுந்தானா பானை உணவாக்கம்
கலியோடு கம்மங்கூட்டு
புளியோடு கொள்ளுச்சாரு
உழைத்து உருமாறிய உடல்
தளைத்து தானே மாறிய திடல்
மாலைப் பொழுதில் மயக்கும் இசை
வேலைப் பளுவை போக்கும் இசை
பச்சைக்காய்கறிகள்
நச்சற்ற உரம்
இச்சைக் காய் கனிகள்
ஒப்பற்ற வரம்
சிகரத்து ஏழைக்கிழவன்
சுவரற்ற குடிசை முன்
நகரத்து வாழ்
நரகத்து ஊழ்