விடுதி...
உறவுகள் இங்கில்லை,
ஆனால் அந்த உணர்வை
உணர்ந்ததில்லை யாரும்.
அன்னையின் கைப்பிடி
சோறு இங்கில்லை ஆனால்,
என் நண்பன் கைப்பட்ட
சோறு உண்டபோது கண்டிருக்கிறேன்
அந்த இன்பத்தை...
என் தந்தையின் கண்டிப்பையும்,
அக்கரையும் காணமுடியாது இங்கு..
இருந்தும் கண்டிருக்கிறேன்
நான் வெளியில் செல்ல அனுமதி
கேட்கபோகும் ஒவ்வொரு முறையும்
என் விடுதி காப்பாளரிடம்,
உறவுகளை பிரிந்து விட்டு
ஒரு உறவாய் வாழ்ந்து வருகிறோம்
நட்பை நம் மனதில் கொண்டு
உணவு உடை இருப்பிடம் இவை
தனித்தனியே இருந்தும் அதை தனதென்று
கூறாமல் தனிமையை வெறுத்து
வாழ்ந்து வந்தோம்.
கல்லூரிக்கு வந்து நாங்கள்
படித்து தெரிந்து கொண்டதை விட,
எங்கள் விடுதியில் வாழ்ந்து
புரிந்து கொண்டவைகள்தான் அதிகம்..
கூட்டமாய் வாழ்ந்து வரும் இந்த
செயற்கை கருவறையிலிருந்து
சிறகு முளைத்து பறக்க ஆசையில்லை
இருந்தும் பறந்தாகத்தான் வேண்டும்
இந்த இயந்திர உலகில்...