தளத்தின் தோழனோடும் மழையோடும்.-எனது இல்லம் !! (சிறு தொடர் :2)

மழை விட்டது…வெளியே

“உங்க ஊரு எது ”

“எங்க ஊரு இது ”

“எத்தனை குழந்தைகள்”

"இத்தனை..,.உங்களுக்கு?."

"நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள்...எங்கே ?"

"நீங்கள்...?"

இந்த பாரம்பரிய வினா பந்தல் இருவரும் கட்டி முடித்தோம்....

மழை –பெரு மழை ‘சிந்த’ தொடங்கியது…இது தமிழ் மழை !!!

எனது படைப்புகள் குறித்த உரை முடிந்தது…

அவரின் படைப்புகள் குறித்து என் மகிழ்வை தோழர் அபியின் சில கருத்துக்கள் பற்றியும் நாங்கள் பேசினோம்...

ஓலைப்பதிவுகள் எனும் பதிவின் மூலம் 20.10.2012இல் அதிகாலை 1:20க்கு தளத்திற்கு வந்தவர் இவர்....முதல் படைப்பே வித்தியாசமாக அளித்தவர்....

ஆற்றுப் பெருக்கு
அடி சுடும் அந்நாளில்
மணல் திருட்டு.

தொட்டனைத்தூறும் மணற்கேணி
ஊழல்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம்
விலைவாசி.

யானை வெரூஉம் புலிதாக்குறின்
கூடங்குளம்.

ஓடுமீன் ஓட உறுமீன்
வரும் வரைக்கும்
வாடி நிற்குமாம் கொக்கு
அந்நிய முதலீடு.

எருது நோய்
காக்கைக்கு தெரியுமா
பாராளுமன்றத்தில் லோக்பால்.

******

இதன் பிறகு இவரின் படைப்புகளில் எனது கவனம் சென்றது...சில வரிகள் இங்கே...


அழைப்புமணி அழுத்தி
வீட்டுக்குள் நுழையும்
தெய்வத்தின் குழந்தைகள்........(பள்ளி நாட்கள் )
******

பிஞ்சுகளுக்கு என்றே
சபிக்க பட்ட பதில்களும்
அவர்களின் உதடுகளில்
சிறை படுத்த படும் கேள்விகளும்
அழுது குமுறுகின்றன
மோட்சங்களுக்காக.... (பள்ளிச்சிறைகள் )
******

புலம்பெயர்ந்தவர்களின்
நீதிக்காக
சரிந்த வெண்குடைகளில்
வெட்கி தலைகுனியும்
ஈழ அகதிகளை
முகாமில் சிறைபடுத்தும்
செங்கோட்டை தத்துவங்கள் .
.(கவி இளங்கோவின் அரண்மனை.)
******.

பாவம்
கன்னல் தமிழின்
மெல்லினங்கள் கூட
ஆங்கிலத்துடன் அரைபட்டு
கடைசி சுவாசத்துடன்
சிக்கித் தவித்தன
ஈனதமிழனின் ...
கடைவாய்ப் பல்லிடையே.....
(செவி தேடும் வரலாறுகள் )

ஒரு முறை சிறந்த கவிதைகள் தெரிவு செய்து பரிசுகள் அளித்தப் போது இவரும் பரிசு பெற்றார்
அந்தக் கவிதை பதிகிறேன்....

இவரின் எழுத்துக்கள் கடிகார முட்களின் தயவிலும் தொழில் அளிக்கும் இடைவெளியிலும் மட்டுமே உடல் களைப்பின் வழிதலின் ஊடே
வரிகளாகின்றன் ....நம்மை வசீகரிக்கின்றன...

தளத்தின் பலர் தங்களின் கடுமையான உழைப்பின் இடைவெளி சந்துகளில் தான் சந்தம் எழுதும் சந்தோஷம் எய்துகின்றனர்...

அயல்நாட்டு திசைகளில் தம் வாழ்வுப் பயணத்தை தன மற்றும் தன குடும்ப உயர்வுக்காக அடகு வைத்துள்ள தோழர்கள் பலர் தங்கள் உணர்வுகளின் வலிக்கான களிம்பு என தளத்தில் கவிதைப் படைக்கின்றனர் -படிக்கின்றனர்....அவர்களில் பலர் வீண் விவாதங்கள் விரும்புவதில்லை...புள்ளிகளும் எதிர்நோக்குவதில்லை...

"தோழர்...பிறகு எதற்கு அண்மையில் ஒரு வாதம் தளத்தில் எழுந்து .வளர்ந்து...சிலர் மனம் .வளைந்து....ஒருவர் முடக்கப் பட்டு..அதற்காக சிலர் முழங்கி...இவை நல்ல ஆரோக்கியமான சூழலா..?"


"இப்போது குளிர் சற்று ஓங்கியது...
எத்தனை நாள் கத்திரியாய் வெயில் வாட்டியது...இன்று தோழா உன் வருகையில் சற்று குளிர் எட்டிப் பார்க்கிறது..நன்றி...இதுதான் வாழ்க்கை ..வந்து போகும் பருவ காலம்.-ஒரு சங்கிலித்தொடராய்....மனிதனும் அப்படியே உணர்வுகளின் பிடியில் சமயங்களில் சிக்கி சிரிப்பதும் சீறுவதும் சிக்கலாக்குவதும். .உண்டு...இப்பண்பு வந்து போகும் பருவ காலமென இருந்தால் வலி நிரந்திரமில்லை..வாழ்க்கையும் அங்கமென மாறிவிட்டால் சிந்தனை தடைப்படும்....தடம் புரளும்...சித்தனை சிதறினால் சேருமிடம் வேறாகும் அல்லவா...

ஒரு படைப்பாளியின் படைப்பு மீதான் வாதம் என்பது ஒரு இராக்கெட் போல இருத்தல் வேண்டும்...சீறிப் பாய்ந்து மேலே செல்ல வேண்டும் ..அன்றியும் உயரும் பொழுது .பல பகுதிகளை நீக்கிக்கொண்டே செல்லுவதுப் போன்று...

ஆனால் சிலர் இங்கு வாதங்களை ஒரு சரக்கு தொடர்வண்டி என அவரவர் தத்தம் சுய விருப்பு வெறுப்பு சரக்குகளை ஏற்றி விடுகின்றனர்.....சிலர் மட்டுமே எட்டி நின்று வேடிக்கைப் பார்க்கின்றனர்....".

இங்கு உள்ள ஒரு சிக்கல்...இறை நம்பிக்கையோடு மூடபழக்கவழ்க்க நம்பிக்கையை இணைத்து பேசுவதுதான்...உலகின் மிகப் பெரிய அறம் என்பது மரணமும் நம்பிக்கையுமே ... இதன் சிதைப்பே பெரிய மறுமலர்ச்சியும் போராட்டமும்...மானுடம் வந்ததில் இருந்து அழியும் வரை இந்த சிதைவுகள் தொடரும்..

இல்லை என்பவனை இருக்கு என இழிப்பதும் இருக்கு என்பவனை இல்லை என இழுப்பதும் இணைக்கோடு இவை...பிரிவதும் இல்லை ...சேர்வதும் இல்லை...இயலாது ....ஒன்றிலேயே இருப்பவனுக்கு மற்றது புரியாது..

என் தலைமுறையோடு இந்த இரண்டிலும் இருந்தவன் உணர்ந்தவன் விகிதம் இனி குறைவே.....தளத்தில் தோழர் அபி..தோழர் வா.நேரு தோழர் தமிழ்தாசன் தோழர் கலை படைப்பு மற்றும் வாதங்கள் பலரால் அரசியலாக்கப்பட்டது என்பதே உண்மை...

“உங்கள் மீது ஒரு குற்றசாட்டு தளத்தில்…..குழுவாக உங்கள் செயல்பாடு உள்ளதென்று..”

“அப்படி சொன்னவர் இன்று ஒரு குழுவை தலைமை ஏற்று ஒரு தளபதி சில கொ.ப.செ என பவனி வருவது குறித்து என்ன விடை உள்ளது உங்களிடம்..? “ என்று த்ழருக்கான சில நூல்களை எடுத்தேன்.

“இல்லை….ஒரு சிலர் தளத்தின் படைப்புகளையே தரம் பிரித்து கோலோச்சி வருவதும் ,நீங்கள் அவர்களை மட்டும் ஊக்குவிப்பதுமாய் தன்முனைப்பில் திளைத்து பலரையும் வளர விடவில்லை என்றும் கூறப்படுகிறதே….! “

“இதற்கு கவிதைக்காரன் என்பவரின் படைப்பில் விளக்கமாக விரித்துரைத்திருக்கிறேனே ? இருப்பினும் கூறுகிறேன்.

தளம் பொதுவானது..அன்றியும் தமிழ் எவர்க்கும் உயிரானது..எனக்கு வாழ்வானது…இந்த உயிர்வாழ்வில் இனம் இனத்தைச் சார்வதில் என்ன தவறு.. நல்ல படைப்பின் ஒத்த சிந்தனை உரத்த மொழி எனும் மன ஏற்றலுக்குரிய கவிதை அமைப்பு சொல்லாடல்..போன்ற இக்காரணிகள் இயற்கையிலேயே ஒரு குழுவை உருவாக்கியது.அந்த குழு செயலாக்கத்திலும் ஈடுபட்டது..

இந்தக் குழுவின் அனைவரும் தத்தம் படைப்புகள் மீது சொல்லப்பட்ட சுட்டல்கலை ஏற்று தங்களின் கவிதை வளத்தின் பரப்பை பலருடன் விரித்துக் கொண்டனர்…நட்பு சிறகையும் விரித்துக் கொண்டு தமிழ் உறவை ஆழ்ப்படுத்திக் கொண்டனர்..

இங்கு ஒருவர் புதிய அவதாரம் திடீரென்று எடுத்துள்ளார் ...விரைவில் தளத்தை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கமாக ஆக்கிவிடுவார்...(தளத்தில் எனக்கு மூத்தவர்..எனக்குப் பின் வந்தவர்கள் குழம்ப வேண்டாம்..).எனது இந்த கருத்தை அவரது படைப்பில் பதிய முடியாதா என்னால் ?..முடியும் ஒதுங்கி விடுவதுப் போன்ற பெரிய தண்டனை வேறு எதுவும் இல்லையே...--தண்டனை எனக்குகோ அன்றி அவருக்கோ...இது இருவரின் மனம் மட்டுமே அறியும்..".....

“அவ்வப்பொழுது பல திருத்தங்களை அளித்து வந்தீர்கள் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டனவா ? . நீங்கள் இப்போதெல்லாம் செய்யவில்லையே..ஏதும் காரணங்கள் உண்டோ...?…..”

.எனக்கு மிகவும் பிடித்தது பின்னிரவில் வானொலிக் கேட்பது...அதற்கும் பின்னிரவில் தொலைக்காட்சி செய்திகள் பார்த்து உறங்கச் செல்வது...

மெல்லிய ஓசையில் இருந்துவந்த 'யாழ் சுதாகரை 'ஒலிஅமுக்கி' வந்தேன்...

----------தொடரும்...

எழுதியவர் : அகன் (9-Jun-13, 9:49 am)
சேர்த்தது : agan
பார்வை : 98

மேலே