உதிர்ந்த ரோஜா இதழ்கள்
உதிர்ந்து விழுந்த
ரோஜா இதழ்கள்
ஓரத்தில் ஒதுங்கின
மெல்லிய காற்றினில்
முள்ளின் பிடியிலிருந்து
விடுதலை பெற்ற
அமைதியில்.....
உதிர்ந்த சருகுகள்
சப்தமிட்டு அழுதன
பசுமையை இழந்த
சோகத்தில்....
அழுது அகன்றாலும்
அமைதியில் விலகினாலும்
வாழ்வின் லட்சியம்
விடுதலை.
----கவின் சாரலன்