வாலியும் வைரமுத்துவும்

வைரமுத்துவின் வரிகளில்
வார்த்தகளுக்கு வசதியிருக்கும்
வாலியின் வரிகளில்
ஜாலியான ரசனையிருக்கும்
வைரமுத்துவின் வரிகளை
வாசிக்க பலவாறு யோசிக்க வேணும்
வாலியின் வரிகளை
வாசிக்க பலநாளும் நேசிக்க வேணும்
வைரமுத்து - விருதினை அடைய
வரிகளை விதைக்கின்றவர்
வாலி - சிந்தனை விருந்துக்காக
வரிகளை கதைக்கின்றவர்
வைரமுத்துவின் வரிகள் - வண்ணக்கோலங்கள்
வாலியின் வரிகள் - எண்ணத்தின் ஜாலங்கள்
தமிழ்க் கடலில் இருவரும் நீந்தினாலும்
வைரமுத்து தருவது வித்தியாசமானது - படித்துணர -
வாலித் தருவது அத்தியாசமானது
(ஒன்றில் மற்றொன்றில் அறிய வைத்தல்)

எழுதியவர் : சங்கு சுப்ரமணியன் (9-Jun-13, 7:45 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 97

மேலே