கருடனின் பிறப்பு

கத்ரு, வினதை இரு அரசிகள்.
கத்ரு - நாகங்களின் தாய்
வினதை - அருணன் மற்றும் கருடனின் தாய்.

ஒரு முறை வானில் வெள்ளைக் குதிரை பறந்து செல்கிறது.

அப்போது அதன் வால் கருப்பாக இருப்பதாக கத்ரு உரைக்கிறாள். வெள்ளையாக இருப்பதாக வினதை உரைக்கிறாள். யார் தோற்றாலும் ஒருவர் மற்றவருக்கு 1000 வருடம் அடிமையாக வேண்டும் என்று முடிவாகிறது.

அன்று இரவு கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து, அவைகள் வாலில் தங்கும் படி கேட்டுக் கொள்கிறாள். அதனால் 'வால் கருப்பாக தெரியும் 'என்றும், 'நான் ஜெயித்து விடுவேன்' என்றும் உரைக்கிறாள். நாகங்கள் 'நீ தவறு செய்கிறாய்' என்று உரைக்கின்றன. அவள் கேட்கவில்லை. பின்பு அவைகள் ஒத்துக் கொள்கின்றன. போட்டியில் கத்ரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறது.

வினதை அடிமையாகி விடுகிறாள்.

அப்பொழுது வினதை கருவுற்றிருந்தாள். அவளிடம் இரு முட்டை இருந்தது.
500 வருட காலம் காத்திருந்தும் எதுவும் நிகழவில்லை. ஒரு முட்டையை உடைத்து விடுகிறாள். அதிலிருந்து அருணன் வெளிவருகிறார். 'அவசரப் பட்டு உடைத்து விட்டாய் தாயே, இன்னும் ஒரு 500 வருட காலம் காத்திரு, மிகவும் பலசாலியாகவும், மிகவும் புத்திசாலியுமான ஒரு மகன் பிறப்பான்' என்று கூறி மறைந்துவிடுகிறார்.

பிறக்கும் போதே மிக பலமுடன் பிறந்து, பலரை துவம்சம் செய்து கத்ரு முன் நிற்கிறார் கருடன்.
'என்ன வேண்டும்' - கத்ரு
'என் தாய் விடுதலை' - கருடன்
'அது இயலாது' - கத்ரு
'அது நிகழ என்ன செய்யவேண்டும்' - கருடன்
'தேவலோகத்திலிருந்து அமிர்தம் வேண்டும்' - கத்ரு

பல இன்னல்களுக்குப் பிறகு அமிர்தம் எடுத்து வருகிறார். தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கிறார்.
கத்ரு, 'அமிர்தம் கொண்டுவந்திருக்குறாயா'
கருடன், 'ஆம், கொண்டுவந்திருக்கிறேன். என் தாயை விடுதலை செய்யுங்கள், '
கத்ரு,' வினதையை விடுதலை செய்யுங்கள். அந்த அமிர்தத்தை கொடு'
கருடன்,'அமிர்தம் கொண்டுவரச் சொல்லிதான் உங்கள் உத்தரவு. உங்களிடம் கொடுக்க சொல்லி அல்ல' என்று கூறி அமிர்த கலசத்துடன் தேவேந்திரனை சந்திக்க புறப்படுகிறார்.

பெரிய திருவடி போற்றி,போற்றி

எழுதியவர் : அரிஷ்டநேமி (9-Jun-13, 8:26 pm)
பார்வை : 189

சிறந்த கட்டுரைகள்

மேலே