வியாபாரம் ஆகிவிட்ட மருத்துவம் - தங்கர்பச்சான்..!

இன்று ஆங்கில மருத்துவத்தால் நமக்கு ஆபத்து தான் அதிகம். ஒரு மருந்தை உட்கொண்டால் ஒன்பது புது நோய்கள் உருவாகிறது இன்று மருத்துவ கல்லூரி சீட்டுகள் பெறுவது வணிகமாகி விட்டது.

என் நண்பரின் மகன் மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க 4 கோடி தந்து சீட் பெற்றார். மருத்துவம் படிக்க நாலஞ்சு வருடத்தில் 15 கோடி ஆகிவிடுகிறது என்றார். இப்படி போட்ட முதலை எங்கு எடுப்பார்...?

நோயாளிகளின் தலையில் தான் இப்படிப் பட்ட நிலை வேதனையான ஒன்று. ஆனால் ஹோமியோ மருத்துவம் இயற்கை மருத்துவம் போன்றது. ஊருக்கு ஊர் ஹோமியோ மருத்துவம் பெரும்பான்மை அளவில் திறக்கப்பட்டு மாற்று மருத்துவம் வளர வேண்டும் என்று கூறினார் தங்கர் பச்சான்..

தமிழகத்தில் 550 - க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருப்பது போல ஏன் 550 மருத்துவக் கல்லூரிகள் திறக்கக் கூடாது..? மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை டில்லியில் உள்ள மருத்துவக் கவுன்சில் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்..?

இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக திமுக அரசியல்வாதிகள் எவ்வாறு இந்த மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் மருத்துவ கவுன்சிலை விட்டு வைத்திருக்கிறார்கள்...? சர்வதேச ரீதியில் கட்டுப்பாடுகளை கொண்டுள்ளதா மருத்துவ கவுன்சில்...? இருக்கட்டும் இவைகள்..!

இன்றைய உணவே மருத்துவத்திற்கு இட்டுச் செல்கின்றன. உணவே மருந்து என்பது போக, எதை உண்டாலும் மருத்துவத்திற்கு இட்டுச் செல்லும் அவல நிலை என்று தான் மாறப்போகிறதோ...? இவையெல்லாம் போக உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசுக்களை உருவாக்கி பல்கி பெருகவைத்து அதன் மூலமும் மருத்துவத்துறை கொள்ளை லாபம் ஈட்டி வருவதை திரையுலகினர் தங்களது படங்களில் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (10-Jun-13, 12:11 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 141

சிறந்த கட்டுரைகள்

மேலே