உற்சாகம்
எட்டாம் நாளில்
இறந்து போகும்
பட்டாம் பூச்சி கொடுக்கும்
இருளின் மடியில்
இருக்கை கொள்ளும்
தட்டாம் பூச்சியில் இருக்கும்
பிடித்தவர்கள் பிடித்ததைச்
செய்யும்போது பிறக்கும்
கானல் நீரைக் காணும்போது
கண்ணிலிருந்து இறக்கும்
காலைப் புலர்வில் ஜனிக்கும்
கதிரவன் சூட்டையும் தணிக்கும்
உன்னில் உள்ளொளி பெருக்கும்
உயிரில் உதட்டில் கலக்கும்
உற்சாகம்
சில இடங்களில் கரையோடும்
சில இடங்களில் கரைபுரண்டோடும்.