மழை
மது குடித்தவனின் மறதி போல
மழை நம்மை மறந்து விட்டதா?
விடுமுறை நாளின்
பள்ளிக்கூடம் போல
எங்கள் வயல்கள்
வெறிச்சோடுகின்றன.
வெய்யில் வியர்வை கசகசப்பை விட
அடைமழையின் கசகசப்பு இதம் தானே?
கடைசியில்....
மழையின் மனதைப் படித்து விட்டேன்.
மழையை யாரும் குற்றம் சொல்லாதீர்.
அது உண்டாக்கிய குளம்,குட்டைகளில் பல
பேருந்து நிலையங்களாகவும்,
மாட மாளிகைகளாகவும் .
சில காணாமல் போய் விட்டதினாலும்
தன் பாத்திரத்தைத் தொலைத்த
பைத்தியக்காரனாய்
மழை கடலிலேயே கொட்டுகிறது.
மழையை யாரும் குற்றம் சொல்லாதீர்.
பின்னர் அது பொழிந்தால் நீங்கள்
தாங்க மாட்டீர்கள்.
மு.பாலசுப்ரமணி