பறவைக்கூட்டம்

வாருங்கள்..
சிறகடித்து சிகரம் தொடுவோம் !

பருவங்கள் மாறுகையில்
துருவங்கள் தேடி
சிறகடிக்கும்..
சிறு பறவைக்கூட்டம் நாமாவோம் !

வாருங்கள்..!

அற்பஜீவிகள் என்று
ஏளனமாய் எண்ணாமல் .
எண்ணச்சிறகுகளை விரித்து
விண்ணை அளப்போம் !

வாருங்கள்..!

சிந்தனைகளை சிறகாக்குங்கள்..
முயற்சியினை
உந்துதலாய் கொள்ளுங்கள்..

வாருங்கள்..!
உயரப்பறந்து சிகரம்தொடுவோம் !

வாருங்கள்..!
உயரப்பறந்து சிகரம்தொடுவோம் !

எழுதியவர் : மகா (9-Dec-10, 7:26 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 637

மேலே