தாயின் குழந்தை உள்ளம்...


குழந்தையின்

கையில் இருந்த பொம்மை

கை தவறி கீழே விழுந்து

அம்மா என கூக்குரல் எழுப்புவதற்குள்

ஐயோ!என அம்மா அலறினாளாம்.

உயிரற்ற பொம்மை

உடைந்திருக்குமோ என்று அல்ல....

உயிரற்ற பொம்மைக்கும்

வலித்திருக்குமோ என்று......


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (10-Dec-10, 8:55 am)
பார்வை : 688

மேலே