விடியலைத் தேடாதே.... உண்டாக்கு !!!!!

ஆயிரம் அணுக்கள்
==புணர்ந்திருக்க நாடும்,
ஆயினும் ஒன்றே
==கரு புணரக் கூடும்..
அகிலம் ஒன்றே
==அதில் உறைவோர்க்கெல்லாம்,
அவர்தம் செயலே
==உயர்வை உண்டாக்கும்..

தோற்றுவிட்டத் தோரணைகள்
==தேத்திக் கொள்ளும் அனுசரணைகள்,
தூற்றிப் போக தெம்பிருந்தால்
==ஏக்கக் கதிர்கள் ஏதுமில்லை..

பறக்கும் பருந்தோ
==பாதாளம் பார்ப்பதில்லை,
அது பார்த்துவிட்டாலே
==பறக்கப் போவதுமில்லை,
சிறக்கும் வாழ்வைச்
==சித்தத்த்தில் கொண்டு
அதைச் சார்ந்து வாழ்ந்தால்
==தாழ்வேதுமில்லை..

விதைந்த விதை
==விதைபட வெறுத்தால்- அது,
விடியல் காணும்
==விதிதான் என்றோ,
சிதைந்த நாட்களே
==சித்தத்தில் இருந்தால்,
சிகரம் சீராய்
==நீ பாய்வதுமென்றோ..

மூச்சுவிட மறந்தாலும்
==முயன்றுவிட மறவாதே,
மூடுபனி முகம் மறைத்தாலும்
==முடங்கிவிட நினைக்காதே..

உழைப்பின் தடத்தை
==பதித்துச் செல்,
ஊதியம் என்றேனும்
==உன்னைச் சேரும்,
உழையா உயர்வு
==அழையா விருந்தினன் தானே,
நீதியும் நிலையாய்
==அதை நிலைக்கவிடாதே..

விடியல் தேடப் பழகிவிடாதே,
==வீதி வீதியாய் நீ அலையக் கூடும்,
விதியை நம்பி விரயம் போகாமல்,
==விடியலை உண்டாக்கி வீறு கொள்ளு..!!!

எழுதியவர் : பிரதீப் (12-Jun-13, 8:35 am)
பார்வை : 196

மேலே