என்னவனே

என் மேல் அதிகம்
அன்பு கொண்டதனாலோ
அடிக்கடி என் மேல்
கோபம் கொள்கின்றாய்!

அன்பே...
என்ன செய்தேன் நான்
சொல்லி விடலாமே!
நீ பேசாமல் செல்கின்ற
ஒவ்வொரு நாளும்
என் உள்ளம் வலிக்கும்!

ஏன் தெரியுமா?
நான் ஏதோ தவறு
செய்து விட்டேனோ
என்று
என் கண்கள் இரண்டும்
இரவெல்லாம்
விழித்திருந்தன!

நிஜமாக
உன் கோபத்தினால்
என்னை கொஞ்ச கொஞ்சமாக
தினமும் கொல்கின்றாய்
ஏன்..

நான் உயிரோடு இருக்கும்
போது உன்னோடு பேச
ஆசைப்படுகின்றேன்
அன்பே
ஆனால்
என் உயிர் என்னை விட்டு
பிரிந்த பிறகு தான்
என்னுடன் பேச நீ
நினைக்கிறாயா

எழுதியவர் : ராதிகா .v (12-Jun-13, 2:02 pm)
சேர்த்தது : RathiKa Rathi
Tanglish : ennavane
பார்வை : 158

மேலே